வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

ஊடகவியலாளர் வித்தியாதரன் கடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறது வீசுதென்றல் ஆசிரியர் குழு.


வசிட்டர்
வித்தியாதரன் இலங்கையின் தமிழ் ஊடகங்களின் மிகப்பிரபலமான ஊடகவியலாளர். இவரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தற்போது கூறினாலும் உண்மையில் அவரை மகிந்த மலர்ச்சாலையில் இருந்து கொண்டுசென்ற விதம் பற்றி பார்த்தவர்கள் கூறுவதைப்பார்க்கும்போது அது ஒரு கடத்தல் போன்றே தோன்றுகின்றது. உதயன் பத்திரிகை அதிபர் எடுத்த உடனடி நடவடிக்கைகளால் வித்தியாதரனின் கடத்தல் கைதாக மாற்றம் பெற்றுள்ளதென நம்புவதற்கு ஏதுவாக உள்ளது. இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இதை வீசுதென்றல் வன்மையாக கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கை அரசோ காவற் துறையினரோ இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாது செயல்படுவது மக்களுக்கு அரசின்மேல் மதிப்பை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வித்தியாதரன் அவர்கள் ஒரு ஊடகத்தின் பிரதம ஆசிரியராக இருந்துகொண்டு செயல்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வியை முன்வைத்தால் இல்லை என்பதே விடையாகும். பத்திரிகை ஆசிரியனுக்கு ஒரு தர்மம் இருக்க வேண்டும். தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்க வேண்டும், நியாயத்தின் பக்கம் குரலை உயர்த்தவேண்டும். ஒரு பக்கச்சார்பான வாதங்களை வைப்பதும் அதை பிழை என்று தெரிந்தும் ஏதோ காரணத்திற்காக சரிஎன்று எழுதுவதும் ஊடகவிலாளர்களுக்கு இருக்கக்கூடாது. எந்தக் கொலையையோ கடத்தலையோ ஒரு பத்திரிகையாளன் மறைக்க முற்படுவதோ அல்லது நியாயப் படுத்துவதோ சரியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இல்லை அது ஒரு முக்கியமான தேவைக்காகத்தான் செய்யப்பட்டது என்று பத்திரிகையாளன் சொல்பவனாக இருந்தால் அவன் பத்திரிகைத் தொழிலை விட்டுவிட்டு பாத்திரம் கழுவும் தொழிலைச் செய்யலாம் அது கௌரவமாகவும் இருக்கும் ஆபத்து இல்தாததாகவும் இருக்கும்.
அரசாங்கம் புலிகளிடம் இருந்து கற்றுக்கொண்டவை எல்வாவற்றையும் இப்போது நடைமுறைப்படுத்துகின்றது இந்த ஊடகவியலாளர்கள் கடத்தல் கொலை என்பனவும் புலிகளிடம் இருந்து கற்றுக்கொண்டவைதான். இதன்மூலம் குறுகிய பாதையில் பிரச்சினையை தீர்த்துவிடலாம் போல் தோன்றும் ஆனால் தொலைநோக்கில் பார்தால் அது அழிவில்தான் முடியும் இதற்கு புலிகளே நல்ல உதாரணம்.
பத்திரிகைகள் தவறான செய்தியை வேண்டுமென்றே போடும் போது அரசாங்கத்திற்கு கோபம் உண்டாவது தவிர்க்க முடியாததுதான். அதற்காக தவறான முறைகளை கையாள்வது தவறாகும். வித்தியாதரனுடைய விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க விரும்பியிருந்தால் அவரை முறையாக கைது செய்திருக்க வேண்டும். அவர்கள் சார்ந்திருப்பது பதிவுசெய்யப்பட்ட ஊடகங்கள், பதிவே இல்லாத இணையத்தளமல்ல ஆகவே நீதிமன்றம் கொண்டு சென்று பொய்யான தகவல்கள் பிரசுரித்தமை, மக்களை தவறாக வழிநடத்தியமை.. என்ற குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையில் அடைக்கப்படல் வேண்டும். அதைக்கூட நீதித்துறையிடம் விட்டுவிடவேண்டும். அரசியல் தலைவர்கள் மூக்கை நுளைக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்கு சட்டத்தில் இடமில்லாதிருந்தால் சட்டத்தை திருத்த வேண்டும். இப்படிச் செய்தால் பத்திரிகைச் சுதந்திரத்தை மீறிய அவப்பெயர் அரசாங்கத்திற்கு ஏற்படாது அத்தோடு பத்திரிகா தர்மத்தை கடைப்பிடிக்காத பத்திரிகையாளர்களையும் நல்வளிப்படுத்த முடியும். அரசு இதை மேற்கொள்ளுமா? பத்திரிகையாளர்கள் சரியானவற்றுக்கு குரல் கொடுப்பீர்களா? எங்கள் இளம் சந்ததியினருக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக் கொடுப்பீர்களா? கொலை வெறிபிடித்து அலையும் காட்டுமிராண்டி தனத்தை ஒதுக்குவோம். நல்ல பத்திரிகையாளர்களாக மாறுவோம். நாம் எம்மைத்திருத்தினால் உலகம் தானாக திருந்தும் என்பதை நம்புவோம் ஏனென்றால் நாம் எல்லோரும் சேர்ந்ததுதான் உலகம்.

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள்.


ஜெர்மனியில் உள்ள பிரித்தானிய அமெரிக்க ஜப்பான் தூதரங்கள் மீதான புலிகளின் வன்முறைகள்.

முழுவதும் பார்க்க

உதயன் சுடரொலி பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்:

இலங்கையில் அரச வன்முறைக்குப் பலியாகும் பத்திரிகையாளர்கள்இ கடத்தல்இ மிரட்டல் கொலை என்று இல்லாமலாக்கபப்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்னொரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டார்.சுடர் ஒளி பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன் வெள்ளை வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இன்று காலை கடத்தப்பட்டுள்ளதாக அப்பத்திரிகையின் நிர்வாகப் பணிப்பாளர் தெரிவித்தார். இக்கடத்தல் சம்பவம்குறித்து கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை கல்கிஸ்ஸை மஹிந்த மலர்ச்சாலையில் இடம்பெற்ற இறுதிக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு இன்று காலை 9.15 மணியளவில் முறைப்பாடு கிடைக்கபெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னியின் இந்த வாழ்வு யாரால்?


வன்னியில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் பொது மக்களின் நிஜ வாழ்வு இப்படங்களில் இருந்து அறிய முடிகின்றது. மரங்கள் அற்ற கடற்கரை வெளி, பங்குனி உச்ச வெயிலை நோக்கிய மாசி மாதம். தண்ணீர் வளமற்ற பிரதேசம். சீலை விரிப்புக்களால் ஆன வீடுகள். வெளிநாடுகளில் ஏசி அல்லது சூடேற்றப்பட்ட வீடு மீன்வாங்க செல்ல கூட பயன்படும் கார். திறந்தால் குடிக்க குளிக்க தண்ணீர். கூடவே வார இறுதி நாட்களில் களியாட்டங்கள். உயிர் போனால் லம்சமாக பெற காப்புறுதிகள் இன்னும் பல… இப்படி இருந்து கொண்டு போர் முரசு கொட்டலாம் தானே. கொல்லப்படுவது என் பிள்ளை இல்லைதானே. வாழ வழி இல்லாத ஏதிலிகள்தான். தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிள்ளைகள், குடும்பங்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில். நன்றாக போர் முரசு கொட்டுங்கள் 3 நாட்களில் 1000 இராணுவம் சாகலாம் 3000 காயப்படலாம். என்ன என் பிள்ளையா? உன்பிள்ளையா? ஊரார் வீட்டுப்பிள்ளைகள் தானே!
நன்றி www.sooddram.com

சனி, 21 பிப்ரவரி, 2009

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 215 கிலோ கிராம் வெடிகுண்டுகள். தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு


சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் 215 கிலோ கிராம் வெடிகுண்டுகள.; தற்கொலை தாக்குதல் முயற்சியென இராணுவம் தெரிவிப்பு
கட்டுநாயக்கவில் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட புலிகளின் இலகு ரக விமானத்திலிருந்து 215 கிலோ வெடி மருந்து மீட்கப்பட்டதாக விமானப் படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
சதுப்பு நிலப் பகுதியில் வீழ்ந்து நொருங்கிய விமானத்தின் பாகங்களை மீட்டுள்ளதாகக் கூறிய விங் கமாண்டர் நாணயக்கார கொழும்பில் தாக்குதல் நடத்த வந்த புலிகளின் இரு விமானங்களும் ணுழியினி 143 ஷி ரக செக் குடியரசின் தயாரிப்பாகுமெனத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொழும்பு நகருக்குள் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டு ஊடுருவியதை அறிந்த விமானப் படையினர், புலிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டனர். கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நகர் இருளில் மூழ்கியது.
புலிகளின் விமானங்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து கொழும்பு நகரை அண்டிய நேரம் வரையில் விமானப்படை தலைமையகத்துக்கு தகவல்கள் வந்த வண்ணமே இருந்தன.
இதனாலேயே புலிகளின் விமானங்கள் சுட்டு வீழ்த்துவதற்கும் விமான எதிர்ப்பு ஏவுகணை பொறிமுறையைச் செயற்படுத்துவதற்கும் ஏதுவாக அமைந்தது எனவும் விமானப்படையின் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் விமானப்படை தலைமையகத்தை இலக்கு வைத்து தற்கொலை தாக்குதலை நடத்த வந்த புலிகளின் விமானம் ஒன்று சூட்டுக்கு இலக்காகி இறைவரித் திணைக்களத்தில் மோதி விழுந்தது.
இப்பகுதியை பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவுடன் படையதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். விமானத்தின் பாகங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளங்கள் காணப்பட்டன. விமானியின் உடல் பாகங்களும் விமானச் சிதைவுக்குள்ளிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று சுமார் 215 கிலோ எடைகொண்ட சீ. 4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகளுடன் பறந்த மற்றுமொரு விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்திய பின்னர் கட்டு நாயக்க விமானப்படைத் தளத்தை இலக்குவைத்து சென்ற போது விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானியின் சடலம் மற்றும் சயினைட் வில்லை, டிஜிடல் கமரா, புலிகளின் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்றவையும் நொருங்கிய விமான பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டன.
நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் புலிகளின் இரண்டு இலகு ரக விமானங்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளன என்ற தகவல் அறிந்த மறுகணமே கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீதிகளில் செல்லும் வாகனங்கள் அதே இடத்தில் நிறுத்தப்பட்டு மின்விளக்குகள் அணைக்கச் செய்யப்பட்டன.
விமான எதிர்ப்பு ஏவுகணைப் பொறிமுறை இயங்க ஆரம்பித்தன. கொழும்பு லேக் ஹவுஸ¤க்கு முன்பாகவுள்ள சிற்றம்பலம் ஏ. கார்டின் மாவத்தையிலுள்ள இறைவரித் திணைக்களத்தின் முன்னால் புலிகள் வீசிய குண்டு விழுந்து வெடித்துள்ளது.
விமான எதிர்ப்பு ஏவுகணையின் தாக்குதலுக்குள்ளான விமானம் இறைவரித் திணைக்களத்தின் 12வது மாடியில் மோதி வெடித்துச் சிதறியது.
விமானத்தின் தாக்குதல் காரணமாக ஒரு விமானப்படை வீரர் உட்பட ஏழுபேர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
(தினகரன்)

புதன், 18 பிப்ரவரி, 2009

மேற்குலகு ஏன் மிதிக்கிறது. தமிழ்நாத கட்டுரைக்கு ஓர் பதில்

வசிட்டர்
தமிழ் நாதத்தில் வெளிவந்த கட்டுரை புதினம் இணையத்தளத்தில் மீள் பதிவு செய்யப்பட்டிருந்தது. யார் எழுதியது என்ற பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை ( புனை பெயர் கூட இல்லாமல் உள்ளது) இதற்கான என் பதிலை முன்வைக்க விரும்பினேன். புதினத்தில் பதிவதற்கான தொடர் இல்லாத காரணத்தால் . வீசுதென்றல் இணையத்திற்கு அனுப்புகின்றேன். புதினமோ தமிழ்நாதமோ பிரசுரித்தால் அது அவர்களின் பத்திரிகா தர்மத்தை விளம்பும்.கட்டுரையாளர் ஆரம்பிக்கும்போதே இந்தியாவும், மேற்குலக நாடுகளும் செய்கின்ற சதிதான் இன்று தமிழ் மக்களின் இன்றைய நிலை என்று ஆரம்பிக்கின்றார். இது புலியை ஆதரிக்கும் ஆய்வாளர்;களுக்கு இப்போதுதான் தெரியவருகின்றதா? இதை எண்பதுகளில் திரு .மு திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய தெற்காசியாவும் தேசிய இனப்பிரச்சினையும் என்ற கட்டுரையில் மிகத் தெளிவாக காட்டிவிட்டார். அதை விட அரசியல் அறிந்த ஈழப் போராட்டக் குழுக்கள் பல இவற்றையெல்லாம் மிகத்தெளிவாக கூறியுள்ளது. இவற்றை புலிசார்பு ஆய்வாரள்கள் அறிந்துகொள்ளவில்லைப் போலும். இந்தியாவையும் மேற்குலக நாடுகளையும் குற்றம் சுமத்துவதற்கு முன்பு இடதுசாரி அமைப்புகளை தடை செய்து ஏகாதிபத்தியங்களின் விருப்பை நிறைவுசெய்தது யார் என்பதை ஏன் பார்க்க மறுக்கின்றார். புலிகள் தான் மக்கள் போராட்டத்தை மறுத்து ஆயுதம் ஏந்திய சிறு குழுவால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று நம்பியவர்கள் போராட்டவடிவத்தை சிதைத்தபெருமை அவர்களுக்குத்தான் என்பதை ஏற்றுக்கொள்வார்களா?
அனைத்தையும் மற்றவர்களின்மேல் பழி போடும் இவர் சமாதான காலத்தை பார்க்கின்றார். சமாதான காலத்தில் உண்மையான சமாதான நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டார்களா? நல்லெண்ணத்தைக் காட்டுவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தையே காட்டினார்கள், தங்கள் ஆயுத பலத்தையும் ராணுவ பலத்தையும் சந்தர்பத்தை பயன்படுத்தி பெருக்கிக் கொண்டுபோனார்கள். உலகம் முழுவதும் ஊடகங்களைப் பெருக்கிக்கொண்டும் உலக தமிழ் ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் வெற்றியும் கொண்டார்கள். அதனால்தான் இன்று உலகத்தில் உள்ள பத்திரிகைகள் புலிகள் சொல்பவற்றை அப்படியே ஒரே அச்சில் வரிக்குவரி வித்தியாசம் இல்லாது போடுகின்றார்கள். ஆனால் அரசியல் ஆய்வாரள்கள் என்ற பெயர்மட்டும் வேறுவேறாக இருக்கும். ஆயுதம் இல்லாத மாற்றுக்கருத்துள்ளவர்கள் மக்களுக்கு அரசியல் விளக்கத்தை கொடுத்துவிடுவார்கள் என்று அதிகளவில் கொலை செய்யப்பட்டதும் இதே சமாதான காலத்தில்தான்.
வரலாற்று புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்து உருவாக்கிய பெருமை பாலா அண்ணையை சாரும் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுகிறார் கட்டுரையாளர். ஆனால் எந்த ஒரு நாடும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வரைபை வைத்துவிட்டு ( இராணுவம், கடல்வளமும் கடல் பாதுகாப்பும். அன்னிய நிதி மூலதனம்) புலம்பெயர் அரசியல் ஆய்வாளர்களைக்கொண்டு ( இவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் தொடங்கிய காலத்தில் அரசாங்கத்துடன் நிண்டுகொண்டு போராட்டத்தை எதிர்த்தவர்கள் அல்லது தமிழ்மக்களை ஈழக்கதை சொல்லி ஏமாற்றி வாக்கு வங்கியை நிரப்பிய கூட்டணியினருடன் நின்றவர்கள் இவர்கள் எதையும் முடிந்தபின்தான் யோசிப்பவர்கள் ) நியாயப்படுத்த பார்த்தார்கள் யாராவது கொஞ்சம் அரசியல் தெரிந்தவன் கேள்வி கேட்டுவிட்டால் “தலைவர் கூடுதலாக கேட்டால்தான் சிங்களவன் கொஞ்சமெண்டாலும் கொடுப்பான்” என்று சப்புக்கட்டு கட்டினார்கள். இது எந்த உலக அரசியலிலும் இல்லாத மக்களை ஏமாற்றுவதாக எண்ணிக்கொண்டு தங்களையே ஏமாற்றினார்கள். அதன் விளைவு நியாயமற்ற கோரிக்கையென உலகம் எள்ளி நகையாடியது. உண்மையாக தமிழர்களின் குறைந்த பட்ச கோரிக்கையை வைத்திருந்தால் நியாயம் நம்பக்கம் இருந்திருக்கும்.
போர்நிறுத்த உடன்படிக்கையில் ஒத்துக்கொண்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தவில்லை அதற்கு மேற்குலகு அழுத்தம் கொடுக்கவில்லை என்று கூறும் கட்டுரையாளர் புலிகள் செய்த தவறுகளை ஏன் பார்க்கவில்லை. இடுப்புப்பட்டி அணிந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லும் உரிமை, அரச கட்டிடங்களில் புலிக்கொடி பறக்க விடும் உரிமை என செப்புக்காசிற்கு பெறுமதியில்லாத விடயங்களில் முரண்பட்டு கொண்டு நம்பிக்கையீனமாக நடந்துகொண்டமை. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் அரசியல் செய்வதாகவும் மக்கள் எழுச்சி மாணவர் எழுச்சி பொங்கு தமிழ் இப்படி ஏதோ ஒன்றைக்கூறி குண்டெறிந்து இயல்பு நிலையை திட்டமிட்டே குழப்பியது போன்றவை செய்யப்பட்டது உடன்படிக்கைக்கு ஏற்றதாகவா இருந்தது.
சமாதான காலத்தில் உலக நாடுகள் தடைசெய்ததைப்பற்றி அங்கலாய்கும் கட்டுரையாளர் புலிகள் செய்த தவறுகள் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? பத்திரிகையாளர்கள். மாற்று இயக்க உறுப்பினர்கள், தங்களோடு ஒத்துவர மறுத்தவர்கள் என்று போட்டுத்தள்ளியது அரசாங்கமா? ஏ9 வீதியில் ராணுவத்தை விட மோசமாக மக்களுக்கு சென்ற உணவுப் பொருட்களை வீதில் இறக்கி சோதனை செய்து வரி என்ற பெயரில் கப்பம் பெற்றபின் திரும்ப ஏற்றச்செய்வது ( இந்த ஏற்றி இறக்கும் செலவினங்கள் கப்பம் என்பவை தமிழ் மக்கள் மேலேயே சுமத்தப்பட்டது. கட்டட தேவைக்காக கொண்டு செல்லப்படும் மணல்கூட பறித்து மீண்டும் ஏற்றப்பட்ட அநாகரிகமான செயல் புலிகளால் புலிகளின் தமிழீழத்தில்தான் இடம் பெற்றது. சொந்த மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரங்களையும் சீரளித்த குற்றம் இவர்கள்மேல் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளைச் செய்ததனால் உலக நாடுகள் தடைசெய்ததை எப்படி நியாயப் படுத்தப்போகிறார் கட்டுரையாளர்?
ஜனநாயக வாதிகள் வைத்த கோசங்களுக்கு செவிசாய்க்காது. இலகுவாக தீர்த்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியது புலிகளின் தான் என்ற மமதை, இந்தியாவை ஓட ஓட விரட்டியது என்னும் இறுமாப்பு, இராணுவத்துடன் சம பலனில் இருப்பதென்ற கற்பனை. இதனால் மக்கள் பற்றியோ மக்களின் தேவைபற்றியோ அல்லது மக்கள் விருப்பங்கள் பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாத போக்கு இருந்த எல்லாச் சந்தர்ப்பங்களையும் இளக்கவைத்துள்ளது.
கடைசியாக கட்டுரையாளர் புலிகள் வாழவேண்டும் புலிகள் இல்லாவிட்டால் தமிழர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது என்று ஒரு பூச்சாண்டி காட்டுகின்றார். இப்படித்தான் 35 வருடங்களாக தமிழ்அரசுக்கட்சி பின்பு தமிழர்கூட்டணி என்றும் அவர்கள் இல்லாவிட்டால் தமிழன் அழிந்துவிடுவான் என்றும் பூச்சாண்டி காட்டப்பட்டது. இனவெறியை தூண்டித்தூண்டியே காலம்காலமாக பாராளுமன்ற கதிரைகளை தக்கவைத்துக்கொண்டார்கள். விழித்தெழுந்த சில தமிழர்களால் அவர்கள் தலைமை தூக்கி எறியப்பட்டது. முழு மக்களுமே அந்த போரின்பின் நின்றார்கள். புதிய தலைவர்கள் புதிய வழிகாட்டிகள் உருவானார்கள். இன்று புலி இல்லாவிட்டால் தமிழனே அழிந்து விடுவான். புpரபாகரன் இல்லாவிட்டால் தலைவர்களே இல்லாது தமிழினம் தத்தளிக்கும் என்று புலி ஊடகங்கள் குப்பை கொட்டுகின்றது. தமிழ் இன வெறி முன் எப்போதும் இல்லாதததுபோல் தூண்டிவிடப்படுகின்றது. புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிழக்குமாகாணம் , கொழும்பில் உள்ள தமிழர்கள் எல்லாம் அழிந்தா போய்விட்டார்கள? வாழ்துகொண்டுதான் இருக்கின்றார்கள். கிழக்கிலும் வடக்கிலும் புலிகள் குண்டு எறிகின்றார்கள், கண்ணி வெடி வைக்கின்றார்கள் அப்போதாவது சிங்கள இராணுவம் வந்து தமிழர்களை கொல்லவேண்டும் சுட வேண்டும் என்பதற்காக எத்தனையோ பாடு படுகின்றார்கள். ஆனால் சிங்கள இராணுவம் புலிகளின் தந்திரங்களில் சிக்காமல் கவனமாக இருக்கின்றார்கள். இயல்புநிலையை குழப்பி லாபம் அடைய முற்படுவது புலிகளே.
இன்று வன்னியில் மக்கள் கொல்லப்படுகின்றார்கள் , புலிகளுக்கு எதிராக பாரிய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது. இதன்போது கொல்லப்படும் மக்கள் தொகை மிக அதிகமாக உள்ளது இது கண்டிக்கப்பட வேண்டியது. அரசாங்கம் இதில் மிகக் கவனம் எடுக்க வேண்டும். அதே நேரம் மனித நேயமில்லாது புலிகள் மக்களை விரும்பிய இடத்திற்கு போக விடாமல் தடுத்து வைத்துள்ளதும். மக்கள் செறிந்து வாழ்கின்ற இடஙகளில் நின்று மோட்டார்க் குண்டுகள் வீசுவதும் , மக்களை அரணாக பாவிப்பதும் அனைத்து மக்களாலும் கண்டிக்கப்படவேண்டியதாகும். இது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இப்போதுள்ள சொற்ப இடத்தில் இருந்தும் புலிகள் ஒழிக்கப்பட்டால் கிழக்கு மாகாணம், கொழும்பு, யாழ்ப்பாணம் போன்று மக்கள் நிம்மதியாக வாழ முடியும். புலிகள் ஓளித்து நின்று குண்டெறியாமலும் கண்ணிவெடி வைக்காமலும் இருந்தால் 35 வருடங்களாக அல்லல் பட்டு ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்கள் சற்று நிம்மதியாக இருப்பார்கள்.
கட்டுரை ஆசிரியர் கேட்டுள்ளதுபோல் புலம் பெயர் உறவுகள் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும். கோரிக்கைகள் வைக்கவேண்டும். மக்களை புலிகளே கேடயமாக்காதீர்கள் என்றும். மக்களை போக விட்டுவிட்டு போர் புரியுங்கள் என்றும் போராட்டம் நடத்துங்கள். மக்களை அவர்கள் வழியில் விடுங்கள். அரசே முகாமிட்டு மக்களைப் பிரித்து வைக்காதே. என்ற கோசங்கள் முன்வைக்கப’படட்டும். மனித உரிமை பேணப்பட வேண்டும் என்ற அழுத்தம் வேண்டும். இனவெறியை தூண்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். புலி இல்லாவிட்டால் தமிழர்களுக்கு எந்த அழிவும் இல்லை. தலைவர்கள் ஆயிரம் பேர் வருவார்கள் போவார்கள். நல்லவற்றை திட்டமிடுபவர்கள் தலைவராவார்கள். அடக்குமுறையாளர்கள் யாராக இருந்தாலும் அழிவுதான் அவர்களின் முடிவாகும் இது நிதர்சனம்.
வெளிநாடுகள் செவிசாய்க்கவில்லை செவிசாய்க்கவில்லை என்று கூப்பாடுபோடுபவர்கள் சற்று சிந்தியுங்கள். ஆர்ப்பாட்டங்கள் செய்யும்போது பயங்கரவாதிகள் என்று பேர் எடுத்து விட்ட புலிகளின் கொடிகள், புலிக்கான கோசங்கள் என்பவற்றை விட்டு விட்டு மக்களுக்கான போராட்டமாக வடிவமையுங்கள். புலியைக்காப்பாற்ற நடத்தும் போராட்டங்களுக்கு செல்லாதீர்கள். அப்படியான போராட்டங்களால் சாதாரண மக்கள் போராட்டமும் வெளிநாட்டு அரசாலும் வெளிநாட்டு ஊடகங்களாலும் திரும்பியும் பார்க்கப்பட மாட்டாது. அதுதான் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்ற திரளுங்கள் அதற்காக மட்டும் போராடுங்கள்.

தமிழ் நாதத்தில் வெளிவந்த அந்தக் கட்டுரை கீழே உள்ளது.


அங்கிருந்து இது வரை... இனி இங்கிருந்து எது வரை?... ஜதிங்கட்கிழமைஇ 16 பெப்ரவரி 2009இ 07:57 மு.ப ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ இன்றைய கட்டத்திற்கு தமிழர் போராட்டம் எப்படி வந்ததுஇ இங்கிருந்து இனி எப்படிச் செல்ல வேண்டும் என்பதை ஆராய்கின்றது இந்த கருத்துரை. வன்னிப் போரினதும்இ உலகளாவிய போராட்டங்களினதும் பின்னணயில் - காலத்தின் தேவை கருதியும்இ படித்தோரின் அறிவுரையின் படியும் இதை மீள் பிரசுரம் செய்கின்றது "புதினம்." நன்றி: "தமிழ்நாதம்". ஜனவரி 18இ 2009
அன்பானவர்களே!
அண்மையில் உங்களுக்கு 'இன்னொரு கடிதம்" எழுதியிருந்தேன். பதில்களுள் பல கேள்விகளாகவே வந்திருந்தன. முதன்மையாய் இருந்ததுஇ "இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்ற சிந்தனைக் கேள்வி.
எம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கின்ற இந்தச் சர்வதேசச் சதி வலை எவ்வாறு படிப்படியாக ஜளுலளவநஅயவiஉயடடலஸ பின்னப்பட்டது என்பதையும்இ நாம் எப்படி அதற்குள் சிக்கிக்கொண்டோம் என்பதையும் தெளிவாக விளங்கிக்கொள்வதே எம் முதற் கடமை.
அந்தச் சதி வலையின் ஒவ்வொரு முடிச்சுக்களும் - ஒவ்வொரு நகர்வுகளாய் - எம்மைச் சுற்றி எப்படிப் போடப்பட்டன என்பதை விளங்கிக்கொண்டால் தான்இ அவற்றை அவிழ்த்துச் செல்வது எப்படி என்பது பற்றியும் நாம் சிந்திக்க முடியும்.
பெரும் இராணுவ சாதனையைப் படைத்து புலிகள் முன்னேறினாலும்இ அல்லது நிலைமை மேலும் சிக்கலாகி அவர்கள் பின்னடைந்தாலும் -
இதுவரை என்ன நடந்தது என்பதை உற்று நோக்குவதுஇ இனிமேல் நாம் செயற்படும் போது என்ன முட்டுக்கட்டைகள் எம் வழியில் போடப்படும் என்பதை விளங்கிக்கொள்ளவும் அவற்றை மேவிக்கடந்து நாம் முன்னே செல்வது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கவும் உதவும்.
நிகழ்வு:
தமிழர்களுக்கு எதிரான இந்தச் சதிவலையை இந்தியாவும்இ மீதி உலகமும் ஜசுநளவ ழக வாந றழசடனஸ இரண்டு முனைகளினூடாகப் பின்னுகின்றன.
முதலாவது - தமிழீழப் போர்க்களம். அது நேரடியான இராணுவப் படையெடுப்பு.
அடுத்தது - பன்னாட்டுப் போர்க்களம். அது இராஜதந்திர அரசியல் கபட நகர்வுகள்.
முதலாவது - பல கற்களை வீசியாவது ஒரே காயை வீழ்த்தும் நோக்கம்: இலக்கு விடுதலைப் புலிகள் இயக்கம்.
அடுத்தது - ஒரே கல்லில் பல காய்களை வீழ்த்தும் எண்ணம்: இலக்கு பன்னாட்டுத் தமிழ் சமூகம்.
முதலாவதின் நோக்கம் - புலிகள் இயக்கத்தின் மரபு வழிப் போர்த் திறனை அழித்துஇ பின்னர் அதனை அரசியல் ரீதியாகவும் ஒதுக்கி - தமிழர்களை நேர்த்தியான அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்கிச் சிதைப்பது.
அடுத்ததின் நோக்கம் - வெளிநாட்டுத் தமிழர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரித்துஇ அரசியல் சக்தியற்றவர்களாக்கிஇ பின்னர் தமிழர்களது தேசியத் தன்மையையே சிதைப்பது.
இந்தப் போரில் பல பங்காளிகள் இருக்கின்றார்கள்: முதன்மைப் பங்காளி - இந்தியா; முக்கிய பங்காளி - மேற்குலகம்; உப-பங்காளி - மீதமுள்ள உலகம்.
இந்த இரண்டு போர்க் களங்களுமே அவற்றிற்குள் பல உப-முனைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு உடனடி இலக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது.
நோக்கம்:
இந்த இரண்டு போர்க் களங்களையும் சேர்ந்த ஒட்டுமொத்தமான போரின் இறுதி இலக்கு - தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டைச் சிதைத்துஇ தமிழீழக் கோரிக்கையை அடிப்படை அற்றது ஆக்குவதாகும்.
ஆனால் ஏன் இப்படி எல்லோரும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான போரை நடாத்துகின்றார்கள்?...
இந்தியா ஒரு காரணத்திற்காகஇ அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் வேறொரு காரணத்திற்காகஇ மேற்குலகிற்கு எதிரான கிழக்குலகம் இன்னொரு காரணத்திற்காகஇ இஸ்லாமிய உலகம் வேறொரு காரணத்திற்காக நடாத்துகின்றார்கள்.
ஆனால் - சுருக்கமாக - எல்லோரும் சேர்ந்துஇ தம் சொந்த கேந்திர அரசியல் நலன்களிற்காக - சிங்கள இனத்தைப் பகடைக் காய்களாகப் பாவித்துஇ தமிழினத்திற்கு எதிராகப் படை எடுக்கின்றார்கள்.
இந்தப் போரை நடாத்துகின்றவர்கள் மிகத் தெளிவாக ஒழுங்கமைத்து - நன்கு திட்டமிட்ட வழிமுறைகளினூடாக - படிப்படியாகஇ நிதானமாக அதைச் செய்கின்றார்கள்.
அதனால் - இந்தப் போருக்கு உட்பட்டு இருக்கின்ற தமிழர்களாகிய நாங்கள் இந்தச் சர்வதேசச் சதியின் பரிமாணங்களைப் போதிய ஆழத்திற்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.
இதுவரை காய்கள் எப்படி நகர்த்தப்பட்டனஇ இப்போது எப்படி நகர்த்தப்படுகின்றன என்பதை மிகவும் நுணுக்கமாகவும்இ நெருக்கமாகவும் நோக்கி நாம் ஆராய வேண்டும்.
அப்போது தான் - இனிமேல் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியும்.
நகர்வு - 1:
2001 இன் சூழலைப் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனையிறவை வீழ்த்திஇ புலிகள் முகமாலை வரை முன்னேறியதிலிருந்து கதை ஆரம்பிக்கின்றது.
போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் கை என்றுமில்லாத அளவிற்கு ஓங்கியிருந்ததும்இ பொருளாதாரத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை என்றுமில்லாத அளவிற்குத் தாழ்ந்திருந்தது மேற்குலகத்திற்கப் பிடிக்கவில்லை.
புலிகளின் போர் எழுச்சியைக் கட்டுப்படுத்தவும்இ சிறிலங்காவின் பொருளாதார வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவும் அப்போது அதற்கு இருந்த ஒரே உடனடி வழி - சண்டையை நிறுத்த வைத்துப் புலிகளைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவது தான்.
2002 இல் - இந்தியாவின் மனம் நிறைந்த ஆசீர்வாதத்துடனும்இ மேற்குலகத்தின் ஏகோபித்த ஆதரவுடனும் சமரச முயற்சிகள் ஆரம்பமாகின. அனுசரணையாளர் ஆகியது நோர்வே; இணைத் தலைமை நாடுகள் என அதனுடன் கூடிக் கொண்டன அமெரிக்காவும்இ யூரோப்பின் யூனியனும்இ ஜப்பானும்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும்இ புலிகள் இயக்கத்திற்கும் இடையில் எழுதப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையானது - எல்லைகளை வரையறுத்துஇ பிரதேசங்களை அங்கீகரித்து - விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த பொது முகாமைத்துவக் கட்டமைப்பினை ஒரு நடைமுறை அரசாங்கமாகவே ஜனுந-குயஉவழ ளுவயவநஸ அங்கீகரித்தது.
இந்த வரலாற்றுப் புரிந்துணர்வு உடன்படிக்கையை வரைந்துருவாக்கிய பெருமை பாலா அண்ணையையே சேரும். இருந்தாலும்இ அவரது எண்ணங்களுக்கு இடமளித்து - கடல் தொடர்பான விவகாரங்கள் தவிர வேறு எதற்கும் முட்டுக்கட்டைகள் போடாமல் - உடன்படிக்கை கையெழுத்தாவதற்கு அனுசரணைகள் செய்தது மேற்குலகம்.
அதற்கு ஒரு மௌனப் புன்னகையோடு ஒப்புதல் கொடுத்தது இந்தியா.
போர்ச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்திவிட்டு தமிழ் தேசியப் போராட்டத்திற்கு சமரச வழியில் அரசியல் தீர்வு காணும் முயற்சிகளில் இறங்கினர் விடுதலைப் புலிகள்.
மேற்குலகம் நியாயத்துடன் செயற்படும் என்று நம்பினர் தமிழ் மக்கள்.
நகர்வு - 2:
ஆனால் - இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படும் வரை நல்லவர்களாக நடித்துஇ ஆசீர்வாதங்கள் வழங்கிஇ அனுசரணைகள் செய்த மேற்குலகம்இ அது நடைமுறைக்கு வந்த பின்னர் தமது சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தது.
ஓன்றன் பின் ஒன்றாக - தமிழர்களுக்குப் பாதகமான விடயங்கள் அரங்கேற்றப்பட்டன. சிலவற்றை சிறிலங்கா அரசும்இ சிலவற்றை மீதி-உலகமும்இ சிலவற்றை இருதரப்பும் சேர்ந்தும் அரங்கேற்றினர்.
1) போர் நிறுத்த உடன்படிக்கையில் ஒப்புக்கொண்டபடிஇ சிறிலங்கா அரசு -
உயர்-பாதுகாப்பு வலயங்களை நீக்கவில்லை. பாடசாலைகளிலும்இ வீடுகளிலும்இ கோவில்களிலும் குடியிருந்த தமது படையினரை அகற்றவில்லை. போரினால் இடம்பெயர்ந்து அல்லற்பட்ட மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கவில்லை. மீள்-கட்டுமான மற்றும் புனர்-வாழ்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட உப-குழுக்கள் செயற்பட இடமளிக்கவில்லை. அந்த உப-குழுக்களால் கண்டறியப்பட்ட 75 வரையான வேலைத் திட்டங்களில் எதனையும் செய்ய உடன்படவில்லை. 2) விடுதலைப் புலிகளின் கடற்-கலங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டு போராளிகள் கொல்லப்பட்டனர்.
3) இவ்வளவும் நடந்துகொண்டிருந்த போது - நோர்வேயோ அல்லது இணைத் தலைமை நாடுகளோஇ உடன்பட்ட விடயங்களைச் செய்து முடிக்கும் படி சிறிலங்கா அரசின் மீது அழுத்தங்கள் போடவில்லை.
எல்லாவற்றிற்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.
இந்த நேரத்தில் -
உடன்படிக்கையிலும்இ அதுவரை நடந்து முடிந்த பேச்சுக்களிலும் ஒப்புக்கொண்ட விடயங்கள் நடக்காதவரைஇ மீதிச் சுற்றுப் பேச்சுக்களுக்குப் போவதில் பயனேதும் இல்லை என முடிவுக்கு வந்தனர் புலிகள்.
இந்த இடத்தில் தான் - மேற்குலகம் அதிர்ச்சியடைந்தது.
சண்டை நிறுத்தத்தை முறித்துக்கொண்டுஇ புலிகள் மீண்டும் போருக்குப் போய் விடுவார்களோ என்று அது திகைப்புற்றது. புலிகள் திரும்பவும் போருக்குப் போனால்இ 2001 ஆம் ஆண்டின் கள நிலவரங்கள் தொடர்ந்தால்இ போர் வலுச் சமநிலையில் புலிகளின் கை இன்னும் ஓங்கினால்இ சிறிலங்காவின் 'சீர்நிலை" ஜளுவயடிடைவைலஸ குலைக்கப்பட்டால்இ அதன் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியுற்றால்... விளைவு என்னவாகிவிடுமோ என்று கவலையுற்றது மேற்குலகம்.
தமிழ் தேசியம் மீண்டும் பேரெழுச்சி பெற்றுவிடுமோ என்று அச்சமுற்றது இந்தியா.
ஆனால் - புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செவ்வனே நடைமுறைப்படுத்திஇ சொன்னவற்றைச் செய்யுமாறு சிறிலங்கா அரசின் மேல் அழுத்தங்களைப்; போடுவதற்குப் பதிலாக -
எது நடந்தாலும் அந்த உடன்படிக்கையில் இருந்து விலகாமல் இருக்கப் புலிகள் மீது மட்டும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வழிமுறையை இந்த உலகம் கையாண்டது.
அதை அது படிப்படியாகச் செய்தது.
நகர்வு - 3:
முதற் படியாக - அடிப்படையாக - தடைசெய்யப்பட்ட ஒர் அமைப்பாகப் புலிகள் இயக்கத்தின் மீது அனைத்துலக ரீதியாக சட்டங்களைக் கொண்டு வந்தது இந்த உலகம்.
இந்தப் போர் நிறுத்த உடன்படிக்கை எழுதப்படுவதற்கு முன்னர் இரண்டு நாடுகள் மட்டுமே புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" என்ற வரைமுறைக்குள் அடக்கியிருந்தன.
ஒன்று - இந்திய;அடுத்தது - அமெரிக்கா.
இப்போது -
அரசியல் சமரச முயற்சிகளில் புலிகள் ஈடுபட்டிருந்த வேளையிலேயேஇ அவர்களை ஒரு 'பயங்கரவாத" இயக்கமாக ஏனைய மேற்கு நாடுகள் சட்டங்களைக் கொண்டு வந்தன.
பிரிட்டன்இ யூரோப்பியன் யூனியன்இ கனடாஇ ஓஸ்ரேலியா என ஒவ்வொரு நாடுகளாகஇ மேற்குலகம் புலிகள் இயக்கத்தைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கியது.
போரை நிறுத்திவிட்டுஇ தமிழரது அரசியல் அபிலாசைகளை அடைவதற்கு சமரச முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு இயக்கத்தைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு நியாயமான எந்த ஒரு காரணமும் இந்த நாடுகளுக்கு இருக்கவில்லை. ஆனாலும்இ அவை அதைச் செய்தன.
தமக்கு எவ்வகையிலும் பயமுறுத்தலாக அமையாத - தமது நலன்களுக்கு எதிராக என்றும் செயற்படாத - ஒர் அமைப்பைப் 'பயங்கரவாத" இயக்கமாகப் பட்டியலிடுவதற்கு எந்தத் தேவையும் இந்த நாடுகளுக்கு இல்லை. ஆனாலும்இ அவை அதைச் செய்தன.
எல்லாவற்றுக்கும் ஒரு மௌனப் புன்னகையோடு ஊக்கமளித்தது இந்தியா.
புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை ஒரு ஊடரளவநச-குண்டு போன்றது. ஒரே பெரிய குண்டு பலவாகப் பரிந்து பல முனைகளில் தாக்குவதைப் போலஇ பல்பரிமாண நோக்கம் கொண்டது.
நகர்வு - 4:
இந்தத் தொடர் தடைகளின் தொடர்ச்சியாக -
'புரிந்துணர்வு உடன்படிக்கை"யின் ஒரு தரப்பை 'அரசாங்க"மாகவும்இ அடுத்த தரப்பைப் 'பயங்கரவாதிக"ளாகவும் தரம் பிரித்து நடாத்த ஆரம்பித்தது உலகு.
'யுத்த நிறுத்தம்" நடைமுறையில் இருந்த போதே கொண்டுவரப்பட்ட இந்தப் 'பயங்கரவாத"ப் பட்டியலிடுதல்களின் உடனடி நோக்கம் -
சமரச முயற்சியிலேயே ஈடுபட்டிருங்கள் என புலிகள் இயக்கத்தை அழுத்துவது. பேச்சு மேசையில் கிடைப்பதை வாங்குங்கள் எனப் புலிகளை நிர்ப்பந்தம் செய்வது. சிறிலங்கா அரசு உடன்பாட்டின்படி செய்யாது விடினும் சமரச முயற்சியிலிருந்து விலகாமலிருக்கப் புலிகளை எச்சரிக்கை செய்வது. சமரச முயற்சிகளிலிருந்து விலகினால் எதிர்காலம் எல்லா வகையிலும் கடுமையானதாக அமையும் எனப் புலிகள் இயக்கத்தைப் பயமுறுத்தல் செய்வது. அதே நேரத்தில் -
இந்தப் 'பயங்கரவாத'ப் பெயர் சூட்டல்களின் பின்னாலிருந்த நீண்டகால உள்நோக்கம் -
மேற்சொல்லப்பட்ட எல்லாவற்றையும் மீறிப் புலிகள் புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகினாலோஇ அல்லது சிறிலங்கா அரசாங்கமே போரை ஆரம்பித்தாலோ -
ஒன்று - உள்நாட்டில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நடாத்தும் சிறிலங்கா அரசுக்கு அனைத்து போர்-தொடர்புபட்ட உதவிகளையும் செய்வது. இரண்டு - அனைத்துலக ரீதியாகஇ தத்;தமது நாடுகளிலிருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுப்பதுடன்இ வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு எவ்வித உதவிகளும் போகாமல் தடுப்பது. மூன்றாவதும்இ முக்கியமானதும் - வெளிநாட்டுத் தமிழர்கள் மீது அழுத்தங்கள் போட்டும்இ உள்நாட்டுத் தமிழர்கள் மீது செல்வாக்குச் செலுத்தியும் - அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிப்பது. நகர்வு - 5:
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையானதுஇ இரண்டு தரப்பையும் சம பங்காளிகளாக்கிஇ படைவலுச் சமநிலையைப் பேணுவதற்கு இரு தரப்பிற்கும் இடமளித்திருந்தது.
ஆனால் - புலிகள் இயக்கம் தமது படை பலத்தைப் பேணுவதற்கு எல்லாவகையான முட்டுக்கட்டைகளையும்இ எல்லா வழிகளிலும் போட்டுக்கொண்டுஇ மறு புறத்தில் -
சிறிலங்காவின் பொருளாதாரத்தையும்இ அதன் இராணுவ இயந்திரத்தையும் முழுமையாகப் பலப்படுத்தும் காரியங்களை இந்தியாவும்இ மீதி உலகமும் மும்முரமாகச் செய்தன.
அதாவது - ஒரு பக்கத்தில்இ சீர்குலைந்து போயிருந்த சிறிலங்காவின் படைத்துறைஇ சமரச முயற்சிகள் ஆரம்பித்து மூன்று வருடங்களிலேயே முழுமையாகக் கட்டி எழுப்பப்பட்டுவிடஇ மறு பக்கத்தில்இ புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ச்சியாகத் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.
போர்க் களம்:
முன்னரே போரை எதிர்பார்த்து - அதற்கு முன்னேற்பாடாக இவ்வளவு நகர்வுகளும் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டுஇ மிகத் துல்லியமாகச் செயலாக்கப்பட்ட பின்பு -
உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக - இரண்டு போர்க் களங்களைத் தமிழர்களுக்கு எதிராகத் திறந்தன சிறிலங்காவும்இ மீதி உலகமும்.
பி.ஜே.பி-யின் ஆட்சி முடிவுக்கு வந்துஇ சோனியா அம்மையாரின் காங்கிரஸ் ஆட்சியல் ஏறியது. ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்குப் பின்னர் - நல்ல தருணம் பார்த்துக் காத்திருந்த பின்னர் - ஓரளவுக்கு நேரடியான தலையீட்டை ஆரம்பித்தது இந்தியா.
பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கும்இ அதன் அணு குண்டுக்கும் பயந்ததைவிடஇ பிரபாகரனின் மனவுறுதிக்கும்இ அவரது தலைமையில் எழுச்சிகொண்ட தமிழ் தேசியத்திற்கும் பயந்தது காங்கிரசின் இந்தியா.
இதுவரையும் மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகளுக்கு - பின்னாலே இருந்து ஆசிகள் தந்த இந்தியாஇ இப்போதுஇ சோனியா அம்மையரின் தலைமையில் - மெல்ல மெல்ல - தானே தலைமை ஆட்டக்காரன் ஆகியது.
பூதாகரமாய் உருவெடுத்த சைனாவை எதிர்கொள்ள வழி தேடிக்கொண்டிருந்த மேற்குலகம்இ இன்னொரு பூதமாய் வளர்ந்த இந்தியாவோடு - வேறு வழியின்றித் தோள் சேர்ந்தது.
தமிழர்களுக்கு எதிரான போர்க் களங்கள் உள்நாட்டிலும்இ வெளிநாடுகளிலும் திறக்கப்பட்ட போது - தென்னாசியாவில்இ இந்தியாவின் விருப்பமே மேற்குலகின் விருப்பம் ஆனது.
முதலாவது களம்:
தமிழீழப் போர்க் களம். அதன் அகன்ற பரிமாணங்கள் பற்றி எனது முதற் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அது நேரடி யுத்தம். மிக வெளிப்படையானது. முழுமையாக இராணுவ மயப்பட்டது. புலிகளின் மரபுவழிப் போர்வலுவை நிர்மூலம் செய்துஇ அவர்களது அரசியல் சக்தியையும் அழிக்கும் இலக்கைக் கொண்டது. மறைமுகக் காரணிகள் என பெரிதாக எதுவும் அற்றது.
புலிகளைப் 'பயங்கரவாதிகள்" ஆக்கிவிட்டுஇ "பயங்கரவாதத்திற்கு எதிரான" போர் என்ற பெயரில் - உலகமே பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றது.
பணத்தை வழங்கிஇ ஆயுதங்களை வழங்கிஇ போரியல் ஆலோசனைகளை வழங்கிஇ போர்க் கருவிகளையும் அவற்றை இயக்குவதற்கு ஆட்களையும் வழங்கிஇ வானூர்தி ஒட்டிகளை வழங்கிஇ புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பற்றிய உளவுத் தகவல்களை வழங்கிஇ வெளிநாட்டுத் தமிழர்கள் மீது சட்ட அழுத்தங்களைப் போட்டு - எல்லோருமாகப் பின்னாலே திரண்டு சிறிலங்காவின் படைகளை முன்னாலே தள்ளுகின்றனர்.
அந்த நேரடிப் போர்க் களத்தைப் புலிகள் தான் வெல்ல வேண்டும். ஆனால்இ அந்தக் களத்தில் அவர்கள் வெல்லுவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் எம்மாலான எல்லா வழிகளிலும் நாம் தான் செய்ய வேண்டும். அதனைத் தவிரஇ அதன் ஆழமான போரியல் விபரங்களில் நாம் கவனம் செலுத்துவதற்குப் பெரிதாக எதுவும் இல்லை.
அடுத்த களம்:
அனைத்துலகப் போர்க் களம். தமிழீழத்திற்கு வெளியே திறக்கப்பட்டிருக்கும் இந்தக் களத்தைத் தான் நாம் ஆழமாக - அலகு அலகாகப் பிரித்து - உற்று நோக்க வேண்டும்.
ஏனெனில் - இது தான் நமக்கான களம். நாம் போராட வேண்டிய களம். நாமே வெல்ல வேண்டிய களம். புலிகளை நம்பியிருக்கத் தேவையில்லாத களம்.
தமிழர்களது தேசிய சுய நிர்ணய உரிமைக்கு ஜயேவழையெட ளுநடக-னுநவநசஅiயெவழைஸெ ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதும்இ தமிழர்களுக்கு எனத் தமிழீழத் தனியரசை அமைப்பதுமே எமது அரசியல் இலட்சியம்.
அந்த இலட்சியத்தை அடைவதற்காகவே விடுதலைப் புலிகள் இயக்கமும் - எமது சார்பில் - ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
தமிழர்கள் தமது தனியரசுக் கோரிக்கையை சர்வதேச அளவில் முன்னெடுப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடுவதற்கு நேரடியான எந்த வழியும் இல்லாத நிலையில்இ இந்த உலகு வேறு மார்க்கத்தைத் தேடியது.
அது கண்டுபிடித்த ஒரு வழி தான் - புலிகள் இயக்கத்தின் மீது உலகெங்கும் கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான தடை. அந்த தடையின் ஒர் இலக்கு - தமிழர்களால் உலகெங்கும் முன்னெடுக்கப்படும் 'தமிழீழம்" என்ற கோட்பாடு.
அதே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளைப் 'பயங்கரவாத" இயக்கம் ஆக்கியதன் மூலமாக -
தனியரசைக் கோருவதும்இ சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும் - அவை நியாயபூர்வமான அபிலாசைகளாக ஜடுநபவைiஅயவந யுளிசையவழைளெஸ இருந்தாலும் - அதே கோட்பாடுகளை ஒரு 'பயங்கரவாத" இயக்கமும் முன்வைப்பதால் -
அந்தக் கோட்பாடுகளை முன்னெடுப்பதே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் கருத்தை முன்வைப்பது போன்றதாகும் எனும் விதமான ஒர் அச்சச் சூழலை வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியில் இந்த உலகு உருவாக்கியது.
அந்த வகையில் - தமிழீழத்தைக் கோருவதும்இ சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துவதும்இ இந்த உலகம் ஏற்றுக்கொள்ள மாட்டாத ஒரு கோட்பாடு என்ற ஒரு கருத்தையும் தமிழர்கள் மத்தியில் உருவாக்கிஇ அதனை நிராகரித்தது.
இதன் மூலமாக - தமிழீழம் பற்றிப் பேசினாலே 'பயங்கரவாத"ப் பட்டம் சூட்டப்பட்டு விடுவோம் என்ற பயத்தையும்இ அந்தப் பட்டம் சூட்டப்பட்டுவிட்டால் வேறு கருத்துக்கள் கூட சொல்ல முடியாமல் நாம் நிராகரிக்கப்பட்டுவிடுவோம் என்ற தயக்கத்தையும் தமது நாட்டுப் பிரஜைகளாக உள்ள தமிழர்கள் மத்தியிலேயே உருவாக்கியது.
இதன் விளைவாக - தமது சொந்த நாட்டுப் பிரசைகளுக்கேஇ அவர்கள் தமது உணர்வுகளையும்இ அபிலாசைகளையும் வெளிப்படுத்துவதற்கும்இ பேசுவதற்கும் உள்ள சுதந்திரத்திற்கு ஜகுசநநனழஅ ழக ளுpநநஉh யனெ குசநநனழஅ ழக நுஒpசநளளழைஸெ அந்தந்த நாட்டு அரசுகளே முட்டுக்கட்டைகளைப் போட்டன.
இவற்றின் முடிவாக - தமிழர்களுக்காக தமிழர்களுக்குள் நடாத்தப்படும் கூட்டங்களில் தமிழீழம் பற்றியும்இ புலிகள் இயக்கம் பற்றியும் வானுயரப் புகழும் நாங்கள்இ அதை உண்மையிலேயே சொல்ல வேண்டிய எங்களது நாட்டு அரசியல் தலைவர்களுடனான சந்திப்புக்களில்இ எதுவும் சொல்ல முடியாதவர்களாய் வாயடைக்கப்பட்டோம்.
இவ்வாறான சூழலில் தான் - தமிழீழம் பற்றிப் பேசினால் தமது பேச்ச எடுபடாது என்ற முடிவுக்கு வந்த எமது வெளிநாட்டுத் தமிழ் செயற்பாட்டாளர்கள் தத்தமது நாட்டு அரசுகளை அணுகுவதற்குப் புதிய ஒரு தந்திரோபாயத்தைக் கையிலெடுத்தார்கள்.
அது என்னவெனில் - எமக்குத் தேவையானதாக இருந்தாலும்இ மேற்குலகத்திற்குப் பிடிக்காத விடயங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டுஇ எமக்கு முக்கியமற்றதாக இருந்தாலும் மேற்குலகத்திற்குப் பிடித்த விடயங்களை மட்டுமே மேற்குலகத்துடன் பேசுவது.
அதாவது - தமிழ் தேசிய இனப் போராட்டத்தின் நிரந்தர முடிவுக்கான எமது அடிப்படை அரசியல் இலட்சியம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டுஇ அந்தப் போராட்டத்தின் வழியில் நாம் சந்திக்கும் துன்பங்களைப் பற்றிய தற்காலிக மனிதாபிமானப் பிரச்சனைகளை ஜர்ரஅயnவையசயைn ஊசளைளைஸ பற்றி மட்டும் பேசுவது.
இந்த இடத்தில் தான் -
தனது ஆறு ஆண்டுகாலம் நீண்ட - பொறுமையான - நுட்பம் மிகுந்த - நகர்வுகளினதும்இ நடவடிக்கைகளினதும் துல்லியமான வெற்றியை மேற்குலகம் பெற்றது.
மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கு உதவி வேண்டி நாம் அதன் காலடியில் விழ வேண்டும் என அது காத்திருந்தது. அப்படி விழுந்து - நாங்கள் அவற்றைச் சார்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்த்திருந்தது. அப்படிச் சார்ந்திருந்து - அது சொல்வதையே கேட்கும் ஒரு நிர்ப்பந்த சூழலுக்குள் எம்மைச் சிக்க வைக்க அது விரும்பியிருந்தது.
அப்படியாக - மனிதாபிமானப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசும் முடிவை நாம் எடுத்த போதுஇ தனது விருப்பத்தில் வெற்றி கண்ட மேற்குலகுஇ எம் மீது ஒரு மாய வலையை விரித்தது.
எமது கஸ்டங்களைச் சொல்லி நாம் அழும் போது அக்கறையோடு கேட்பது போல நாடகமாடியது. தனக்கு ஏற்கெனவே தெரிந்த விடயங்களையே - நாம் சொல்லும் போது - ஏதோ புதிதாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்தது.
நாமும் - 'மேற்குலகிற்குப் பிடித்த விடயங்களைப் பேசும் போது அது அக்கறையோடு கேட்கின்றதே" என்றுஇ அதற்குத் தெரிந்த விடயங்களையே பேசிப் பேசிஇ கடைசியில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைச் சொல்லுவதை விடுத்துவிட்டுஇ மேற்குலகத்திற்கு என்ன பிடித்ததோ அதை மட்டுமே பேசப் பழகிக்கொண்டோம்.
இப்பொழுது -
முப்பது ஆண்டு காலம் போராடியதன் பின்புஇ நூறாயிரம் மக்களை உயிர்ப்பலி கொடுத்த பின்புஇ இருபத்தி மூவாயிரம் பேராளிகளது கல்லறையின் மேல் நின்று கொண்டு -
"தமிழீழத் தனியரசு" பற்றிப் பேசுவதை நாங்கள் தவிர்க்கின்றோம். தமிழரின் சுய நிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கு நாங்கள் தயங்குகின்றோம். "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே எமது ஏக அரசியல் பிரதிநிதிகள்" என்று வெளிப்படையாகச் சொல்லுவதற்குப் பின்னடிக்கின்றோம்.
சொல்லப்பட வேண்டிய இவற்றைச் சொல்லிஇ எமக்கான அங்கீகாரத்தைத் தலைநிமிர்ந்து கோருவதைத் தவிர்த்துவிட்டு - உணவும்இ உடையும்இ மருந்தும்இ போர் நிறுத்தமும் வேண்டி - பிச்சைக்காரர்கள் போல - உலகத்தின் முற்றத்தில் கையேந்தி நிற்கின்றோம்.
வன்னித் தமிழர்கள் அழிகின்றார்கள்இ கிழக்குத் தமிழர்கள் படுகொலையாகின்றார்கள்இ வடக்குத் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள்இ கொழும்புத் தமிழர்கள் காணாமல் போகின்றார்கள்இ மலையகத் தமிழர்கள் கைதாகின்றார்கள் என்று உலகத் தமிழர்கள் நாம் புலம்பி அழுகின்றோம்.
இந்த உலகத்திற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும் எங்கள் துயரங்களைத் திரும்பவும் சொல்லுவதற்காக - ஊர்வலங்கள் வைத்துஇ மட்டைகள் பிடித்துஇ கோசங்கள் எழுப்பிஇ கடிதங்கள் எழுதிஇ மனுக்கள் அனுப்பி - எம்மையே நாம் ஏமாற்றுகின்றோம்.
போராட்டத்துக்கு அடிப்படையான 'தமிழீழம்" என்ற தீர்வை வலியுறுத்துவதை விட்டுவிட்டுஇ போரை நிறுத்தும்படி மன்றாடுகின்றோம்.
பிரபாகரனும் அவருடைய போர் வீரர்களும் தலை குனியாது நிகழ்த்தும் கம்பீர யுத்தத்தின் தார்ப்பரியங்களை நாம் கேவலப்படுத்துகின்றோம்.
ஆனால் - இந்த நாளுக்காகத்தான் இந்த உலகமும்இ காங்கிரசின் இந்தியாவும் காத்திருந்தனஇ தமது கடைசி நகர்வை மேற்கொள்வதற்காக.
அந்தக் கடைசி நகர்வு தான் - புலிகள் இயக்கத்தின் மீது கொண்டுவரப்பட்ட அந்த ஊடரளவநச-குண்டு பாணியிலான உலகத்-தடையின் கடைசி இலக்கு.
அது - வெளிநாடுகளில் வாழும் தமிழர்களைப் புலிகளிடமிருந்து பிரிப்பது; உள்நாட்டில் வாழும் தமிழர்களின் மீது போலித் தீர்வு ஒன்றைத் திணிப்பது.
ஒரு புறம் - மனிதாபிமானப் பிரச்சனைகளைச் சொல்லித் தம்மைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்களைஇ மானிட நேய முகத்தைக் காட்டி மயக்கியது இந்த உலகம்.
மறு புறம் - 'ஈழத்தமிழர்களைக் காப்பாற்று!” என்று பொங்கியெழுந்த தமிழகத் தமிழர்களைஇ 'இதோ முகர்ஜியை அனுப்புகின்றோம்இ மேனன் போயிருக்கின்றார்" என்று கூறியே அடக்கியது இந்தியா.
இப்போது -
தமிழர்களின் அவலங்களைத் தீர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு மேற்குலகும்இ அவர்களை அழிவிலிருந்து காப்பதாகக் கூறிக்கொண்டு இந்தியாவும் காலத்தை இழுத்தடிக்கின்றன.
கிளிநொச்சியின் வீழ்ச்சிக்காய் காத்திருந்துஇ ஆனையிறவின் வீழ்ச்சிக்காய் காத்திருந்து - இப்போதுஇ முல்லைத்தீவினதும்இ புதுக்குடியிருப்பினதும் வீழ்ச்சிக்காய் காத்திருக்கின்றன.
முப்படைகளையும்இ நெடுந்தூரப் பீரங்கிகளையும் வைத்திருக்கும் புலிகளின் மரபுவழிப் போர்வலுவை உடைத்துஇ மீண்டும் அவர்களை ஒரு கெரில்லாப் படையாக காட்டிற்குள் பதுங்க வைக்கும் நம்பிக்கையோடுஇ சிறிலங்காவுக்கு காலத்தை எடுத்துக் கொடுக்கின்றன.
அதே நேரத்தில் - இன்னொரு பக்கத்தில் - விடுதலைப் புலிகளோடு இருக்கும் வரை தமிழர்களது துன்பங்கள் எதுவும் நீங்கப் போவதில்லை என்ற சமிக்ஞையை கொடுத்து -
'புலிகள் அழிந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் பிரச்சனைக்கு நாங்கள் நல்ல தீர்வைப் பெற்றுத் தருகின்றோம்இ நீங்கள் புலிகளை விட்டு விலகுங்கள்" என்று தமிழர்களுக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன.
இந்த அணுகுமுறையோடு -
முதலாவதுஇ அது சரிவராமல் போனால் அடுத்தது என இரண்டு நோக்கங்களோடு இந்தியாவும் இந்த உலகமும் செயற்படுகின்றன:
புலிகளிடமிருந்து தமிழர்களையும்இ தமிழர்களிடமிருந்து புலிகளையும் பிரித்துஇ விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் செல்வதைத் தடுப்பது. உதவிகள் போகாமல் நிர்க்கதியாகி நிற்கும் புலிகளை இராணுவ ரீதியில் அழிப்பது. புலிகள் அழிந்த பின் - கேட்பதற்கு யாருமற்ற நிலையில் தமிழர்கள் இருக்கும் போதுஇ பிச்சை போலஇ தீர்வே இல்லாத ஒரு தீர்வை அவர்கள் மீது திணிப்பது. வெளிநாட்டுத் தமிழர்களது நிதியுதவியில் தான் புலிகள் இயக்கம் தங்கியிருக்கின்றது என்பதால்இ வெளிநாட்டுத் தமிழர்களைக் கபடமாய்க் கவர்ந்துஇ அவர்கள் மூலமாக புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் போடுவது. அந்த அழுத்தத்தின் மூலமாக – விடுதலைப் புலிகளைத் தமது வழிக்குக் கொண்டு வந்துஇ பிச்சை போலஇ தீர்வே இல்லாத ஒரு தீர்வை ஏற்க வைப்பது. இந்த இரண்டு நோக்கங்களில்இ ஏதாவது ஒன்றை அடையும் எண்ணத்தோடு தான் இந்தியாவும்இ இந்த உலகமும் இப்போது செயற்படுகின்றன. இப்போது -
உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்ற அந்த மிக முக்கியமான கேள்வியை எம்மைப் பார்த்தே நாம் கேட்போம்.
இந்தியாவில் காங்கிறஸ் ஆட்சி இறங்கினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோஇ அமெரிக்காவில் ஒபாமாவின் ஆட்சி ஏறினால் என்ன நடக்கும் எனக் காத்திருக்கவோ எமக்கு இப்போது நேரம் இல்லை.
விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிக்காகக் காத்திருக்கவும் எமக்கு இனி நேரம் இல்லை.
போராட்டத்தை உடனடியாக நாமே கையில் எடுப்போம்.
சரியான நகர்வுகளை நாம் தெளிவாக மேற்கொண்டால்இ புலிகளின் போர் வெற்றிக்கே நாம் வழியமைக்கலாம்.
அல்லது - நாம் காத்திருப்பதைப்போலஇ புலிகள் இயக்கம் ஒரு மாபெரும் இராணுவ வெற்றியைச் சாதித்தால்இ அதற்கெதிராக இந்த உலகமும்இ காங்கிரசின் இந்தியாவும் முன்னரைப் போல குறுக்கே வர முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம்.
எப்படி?
எம் முன்னால் இரண்டு பணிகள் உள்ளன. ஒன்று உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. அடுத்ததுஇ மிக உடனடியாகச் செய்யப்பட வேண்டியது.
உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை என்ன என்ன என்பதை நீங்களும் சிந்தித்து எமக்கு எழுதுங்கள்இ நானும் சிந்திக்கின்றேன்.
அவற்றைச் சிந்திக்கின்ற அதே வேளையில்இ பெரிதாகச் சிந்தனை எதுவும் தேவைப்படாத - மிக உடனடியாகச் செய்;யப்பட வேண்டிய பணியை இப்போதே சொல்லிவிடுகின்றேன்.
சுருக்கமாகச் செல்வதானால் - உலகெங்கும் இருக்கும் இந்தியத் தூதுவரகங்களைத் தமிழர்கள் உடனடியாக 'முற்றுகை" இட வேண்டும்.
இங்கே நான் 'முற்றுகை" என்று குறிப்பிடுவது மனிதர்கள் கூடி வளைப்பதை மட்டுமல்ல. எம் எண்ணங்களால்இ கருத்துக்களால்இ ஆக்கபூர்வமான செயல்களால் முற்றுகை இட வேண்டும்.
எமது பிரச்சனையில் இந்தியாவே இப்போது முதன்மையானதும் முக்கியமானதுமான ஆட்டக்காரர்: தமிழர் போராட்டத்தை இந்தியா எதிர்த்தால்இ முழு மேற்குலகமும் எதிர்க்கும்; இந்தியா அங்கீகரித்தால்இ முழு மேற்குலகமும் ஆதரிக்கும்.
தென்னாசியாவில் இன்று இந்தியாவே எல்லாம்: இந்தியாவை மீறி இந்து சமுத்திரத்தின் அலை கூட அசையப் போவதில்லை.
பாகிஸ்தானோடு பரவசப்பட்டுஇ சைனாவோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் சிறிலங்காவுக்குஇ தனது நாட்டின் ஏழு கோடி மக்களினது விருப்பமின்மையையும் மீறி இந்தியா உதவி செய்வது இரண்டு காரணங்களுக்காக -
ஒன்று - 'எங்கள் நாட்டுப் பிரதமரைக் கொன்றவர்களை நாம் சும்மாவிடுவதா?" என்ற காங்கிரஸ் காரர்களின் அர்த்தமற்ற வரட்டுக் கௌரவம்.
அடுத்தது - தமிழீழத் தனிநாடு தென்னிந்தியாவில் தனியரசுக் கிளர்ச்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையற்ற பயம்.
தனது தென் கோடியில் ஒரு பெரும் காப்பரனாகவும்இ என்றும் தளம்பல் அற்ற ஒரு வரலாற்று நண்பனாகவும் இருக்கக்கூடிய ஒரு மக்கள் இனத்தை அழிக்க இந்தியா இன்று முன்னின்று முயல்வதற்கு வேறு எந்த உருப்படியான காரணமும் இல்லை.
செய்தி:
முக்கியமான மூன்றே மூன்று விடயங்களை இந்தியாவிடம் நாம் - மீண்டும் மீண்டும் - எல்லா வழிகளிலும் வலியுறுத்த வேண்டும்.
அந்த மூன்று விடயங்களையும் செய்யுமாறு - கடுமையான அழுத்தங்களைத் தொடர்ச்சியாகப் பிரயோகிக்க வேண்டும்.
தமிழீழப் போராட்டத்தை அங்கீகரித்துஇ தனியரசு உருவாக உதவுங்கள்:அது தான் இந்தியாவின் பாதுகாப்புக்கும் நிபந்தனையற்ற உத்தரவாதம். தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக அரசியல் பிரதிநிதிகள்:வேறு எவரையும் எம் பிரதிநிதிகளாக நாம் எற்றுக்கொள்ளப் போவதில்லை.இந்தியாவின் நலன்களுக்கு எதிராகப் புலிகள் எப்போதும் செயற்படவில்லை.புலிகள் மீதான தடையை நீக்கி இராஜதந்திரத் தொடர்புகளை எற்படுத்துங்கள். சிறிலங்காவுக்கான போர்-சார் உதவிகளை உடனடியாக நிறுத்துங்கள்:கருவிகள்இ உளவுத் தகவல்கள்இ ஆளணிஇ ஆலோசனைகள் என எல்லாவற்றையும்.சிறிலங்கா உங்களின் நம்பிக்கையான நண்பனாக எப்போதுமே இருந்ததில்லை.
செயல் - 1:
உலகிலுள்ள ஒவ்வொரு இந்தியத் தூதுவரகத்தையும் நாம் அணுக வேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாளர்களும்இ இளையோர் அமைப்புக்களும் தேர்ந்த பிரதிநிதிகள் குழக்களை ஜனுநடநபயவழைளெஸ உருவாக்கி அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களைச் சந்தித்து இந்த மூன்று விடயங்களையும் வற்புறுத்த வேண்டும். இன்றே இதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
ஒரு தடவையோஇ இரு தடவையோஇ மூன்று தடவையோ போய்விட்டு விட்டுவிடாமல்இ தொடர்ச்சியாக - மாதத்தில் இரு தடவையாவது - செல்ல வேண்டும். இந்தியத் தூதுவரகங்கள் மீது அழுத்தங்களை இடைவிடாது போட வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாமும் ஓயப் போவதில்லை என்ற தெளிவை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.
தற்போதைய போரை நிறுத்துவது பற்றியும்இ வன்னி மக்கள் எதிர்கொண்டு நிற்கும் மனிதப் பேரவலத்தைப் பற்றியும்இ அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் பெரும் இனப் படுகொலை ஆபத்தைப் பற்றியும் சொல்லுகின்ற அதே வேளையில் -
இந்த ஒவ்வொரு சந்திப்பினதும் கடைசி 40 வீதமான நேரம்இ மேற்சொல்லப்பட்ட இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்துவதற்கு ஒதுக்கப்பட வேண்டும்.
இந்த மூன்று விடயங்களயும் நாம் முன்வைக்கும் போது - பல மழுப்பல் கதைகளை இந்திய தூதுவர்களும்இ அங்குள்ள அதிகாரிகளும் எமக்குச் சொல்லுவார்கள்.
"சோனியா காந்தி இருக்கும் வரை இவை எதையும் செய்ய முடியாதுஇ" "அவர் பழைய கோபத்தில் இருக்கின்றார்இ" "டெல்லியிலுள்ள காங்கிறஸ் தலைவர்கள் இவற்றுக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்இ" "பிரபாகரன் மீது எல்லோரும் கோபத்தில் இருக்கின்றார்கள்இ" என்ற விதமாக ஆயிரத்தெட்டுக் கதைகளை அடுக்குவார்கள்.
"பிரபாகரன் இல்லாமல் போனால் அடுத்ததாக யார் வருவினம்?இ" "அடுத்த இடத்தில யார் இருக்கினம் என்று?" என்று கேள்விகள் கேட்பார்கள். ஏதோஇ பிரபாகரன் இல்லாமல் போனால் தமிழருக்கு விடிவு கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை எமக்கு ஊட்டுவது போல நடிப்பார்கள்.
ஆனால்இ நாங்கள் மயக்கமடையாமல்இ திடமாகவும்இ ஒரே சீராகவும் இருந்துஇ தொடர்ச்சியாக எமது அந்த மூன்று கோரிக்கைகளையும் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும்.
செயல் - 2:
இந்தியத் தூதுவரகங்களின் முன்னால்இ இந்த மூன்று விடயங்களையும் வலியுறுத்தி பேரணிகளை தொடர்ந்து நிகழ்த்த ஆரம்பிக்க வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழ் செயற்பாட்டாள்களும்இ இளையோர் அமைப்புக்களும் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.
ஆகக் குறைந்தது ஆயிரம் பேராவது ஒவ்வொரு தடவையும் அங்கு திரள வேண்டும். பேரணிகளின் முடிவில்இ தூதுவரையும்இ தூதுவரக அதிகாரிகளையும் வெளியில் அழைத்து எமது கோரிக்கைகளைக் கையளிக்க வேண்டும். எமது கோரிக்கைகள் நிறைவேறாது விட்டால்இ நாம் அடங்கிப் போக மாட்டோம் என்பதையும் உணர்த்த வேண்டும்.
ஆனால்இ இந்தப் பேரணிகளின் முக்கியத்துவம் இவை அல்ல -
முக்கியமானது என்னவெனில் - பேரணிகள் ஒழுங்கு செய்வதற்கு ஒதுக்கப்படும் சக்தியின் அதே அளவுஇ அல்லது அதைவிட அதிகமான அளவு சக்தி வெளிநாட்டு ஊடகங்களை ஜகுழசநைபn ஆநனயைளஸ அந்த நிகழ்வுக்கு வரவைப்பதிலும்இ அந்தப் பேரணிகள் பற்றிய செய்திகளை வெளியிட வைப்பதிலும் செலவிடப்படவேண்டும்.
பேரணிகளை வைத்துவிட்டுஇ சும்மா "புதினத்"திலும்இ "தமிழ்நெற்"றிலும் மட்டும் "சங்கதி"களைப் "பதிவு" செய்துஇ படங்களைப் போடுவதில் எந்தப் பலனும் இல்லை.
அந்தந்த நாடுகளிலுள்ள தமிழர்களது-அல்லாத ஊடகங்களை ஜழேn-வுயஅடை ஆநனயைளஸ அங்கு வரவழைக்க வேண்டும். எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் அவர்களுக்கு விளக்கி - வலியுறுத்தி - அந்த ஊடகங்களை நாம் தெளிவுபடுத்த வேண்டும்.
பன்னாட்டு ஊடகச் செய்திகள் தான் இந்தியாவின் மீதும்இ இந்தியத் தூதுவர்கள் மீதும் அழுத்தங்களை அதிகரிக்கும். அதே வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தான் அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்தையும் ஈர்க்கும். ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தை இந்தியாவுக்கும்இ அந்தந்த நாடுகளுக்கும் ஏற்படுத்தும்.
எந்த ஒரு மாபெரும் பேரணியின் வெற்றியும்இ பலனும் - அந்தப் பேரணிக்குப் பன்னாட்டு ஊடகங்களில் கிடைக்கும் இடத்தில் தான் தங்கியுள்ளது.
செயல் - 3:
கும்பல் கும்பலாக மின்னஞ்சல்களை அனுப்புவது எந்தப் பலனையும் தராது. அவற்றைத் திறந்து பார்க்கவே மாட்டார்கள். திறக்காமலேயே "குப்பைத் தொட்டி"க்கள் போட்டுவிடுவார்கள்.
தாள்களில் கடிதங்களை எழுதி இந்தியத் தூதுவரகங்களுக்கு இலட்சக் கணக்கில் நாம் அனுப்ப வேண்டும். இந்த முயற்சியை ஒவ்வொரு நாடுகளிலும் தமிழ் செயற்பாட்டாள்கள்இ இளையோர் அமைப்புகளது துணையுடன் மிக உடனடியாக ஒழுங்கமைக்க வேண்டும்.
சோனியா காந்தி அம்மையாருக்கும்இ மன்மோகன் சிங் ஐயாவுக்கும்இ அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதுவர்களுக்கும் - சுருக்கமான ஒரு பக்கக் கடிதங்களைத் தனித்தனியாக எழுதிஇ உறைகளில் இட்டு இலட்சக் கணக்கில் அனுப்ப வேண்டும்.
அவ்வளவு பிரமாண்டமான தொகையில் வந்து குவியும் கடிதங்களை அவர்கள் திறந்து பார்த்தே ஆக வேண்டும். அவை அவர்களை ஏதோ ஒரு வகையிலான நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கும்.
முக்கியமாக - அந்தக் கடிதங்கள் எமது இந்த மூன்று கோரிக்கைகளையும் உறுதியாக வலியுறுத்த வேண்டும்: தமிழர்கள் தொடர்பாக இந்திய அரசின் வேறு எந்த அணுகு முறையையோ அல்லது நடவடிக்கையையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
தமிழீழத்தின் பிறப்பே இந்தியாவின் நலன்களையும் பாதுகாக்கக்கூடியது என்பதை ஆதாரபூர்வமாக வலியுறுத்த வேண்டும்

திங்கள், 9 பிப்ரவரி, 2009

வன்னியில் வாழ்ந்த ஓர் தாயின் திடுக்கிடும் தகவல்.

வெளிநாட்டில் வாழ்ந்த ஓர் இளைஞன், புலிகளின் சமாதான காலத்தில் வன்னி மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க என்று பல இளைஞர்கள் யுவதிகள் சென்றபோது இவனும் வன்னி சென்றான். அம்மக்களோடு சிலநாட்கள் கழிந்தது. புலிகளின் சுற்றுலாவில் கண்ணைக் கவரும் கல்லறைகளும், வெளிநாட்டு வாகனங்களில் உலாவரும் புலிகளின் இடைநிலைத் தலைவர்களும், அவர்கள் வைத்திருந்த சுடு கருவிகளும் இவனையும் கவர்ந்தது. புலிகளின் உலகப்பொறுப்பாளர் காஸ்ரோவின் வார்த்தையாலங்களால் கவரப்பட்டவன். அவருக்களித்த வார்தைப் பிரகாரம் வெளிநாட்டிற்கு திரும்பி ஒரு வருடமே படித்து முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை முடித்துவிட்டு ( அந்த காலங்களில் வெளிநாட்டு புலி அமைப்போடு ஆழ்ந்த தொடர்புகள் இருந்தது) மீண்டும் வன்னி செல்கிறான். பெற்றோரால் அழுது குளறியும் தடுக்கமுடியவில்லை. ஆறு மாதங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்று தெரியாமல் வன்னிக்கும் கொழும்பிற்கும் வெளிநாட்டிற்குமாக அலைந்து திரிந்த தாய்க்கு தகவல் கிடைக்கிறது. “அம்மா என்னை எப்படியும் புலிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்” பதறித்துடித்த தாய் மீண்டும் வன்னியை நோக்கி ஓடுகிறாள் ஆறுமாதங்களாக வன்னியில் இவளது மகன் மீட்புப் போர். அந்தக்காலத்தில் அவள் கண்ட வன்னியின் நிலமையை அவள் சொல்லக் கேட்டு அதை அப்படியே தருகின்றேன்.

விசா எடுத்துக்கொண்டு பஸ்சில போறன் எனக்கு பழக்கமே இல்லாத வன்னிநிலப்பரப்பு. அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட வீட்டில் இறக்கப்படுகின்றேன். விசாலமான வசதிகள் நிறைந்த வீடு. வீடுவசதியாக இருந்தாலும் சுற்று வட்டாரங்கள் பயங்கர அமைதியாகவும் மனிசற்ற முகத்தில ஒரு சிரிப்போ கலகலப்பையோ காணமுடியாது. ஒரு சில தம்பிமார் மோட்டசைக்கிளில வந்து சில கேள்விகள் கேட்டு குறித்துக்கொண்டு பிறகுவாறம் எண்டு போவினம். பொழுது பட ஒரு பெடியனும் பெட்டையும் வந்தினம் ரெண்டுபேரும் கலியாணம் கட்டியிருக்கீனம். ரெண்டுபேரும் புலியின்ர காம்பிலதான் வேலை. எனக்கு கொண்டுவந்த சாப்பாட்ட தந்தினம். அந்த பிள்ளை சொல்லும் அன்ரி என்ன வேணுமெண்டாலும் கேளுங்க எண்டு. சாப்பாடு தண்ணிவென்னி பழவகை குளிர்பானம் ஒண்டுலையும் ஒரு குறையுமில்ல. என்ர பிள்ளைய நான் எப்பயம்மா பாக்கலாம்? பாக்கலாம் அன்ரி அது வேற பிரிவு எங்களுக்கு தெரியாது அவயள் வந்து சொல்லுவினம். இப்பிடியே நான் கேள்வி கேக்கிறதும் அந்தப்பிள்ள மறுமொழி சொல்லுறதாவும் இருக்கும். அதுகளின்ர முகத்தில ஒரு சந்தோசம் கிடையாது. ஏந்த நேரமும் ஓடுறதும் வந்து படுக்கிறதும் அப்பிடியே போகும்.தங்கச்சி நீங்க என்ன வேலை செய்யுறீங்கள் நான் கேப்பன் கொடுப்புக்கள்ள சிரிச்சுப்போட்டு போவாள். நான் அந்த வீட்ட விட்டு வெளிக்கிடும் வரைக்கும் இந்தக் கேள்விக்கு அதின்ர பதில் அந்த சிரிப்புத்தான். பகல் ரெண்டுபேரும் காம்புக்கு வேலைக்கு போனபிறகு வெளியில போயிற்று வருவமெண்டு நடந்தன் றோட்டில ஒன்றிரண்டு சனத்ததான் பாக்க கூடியதா இருந்துது. நான் பார்த்து சிரிச்சா அதுகள் ஒரு மாரிப்பாத்துக்கொண்டு போகுங்கள். அந்தப்பார்வையில ஒரு கோவம், ஒரு வெறுப்பு தெரியும். இதுகள் ஏன் இப்பிடி எண்டு நினைச்சுக்கொண்டு போவன். ஒரு அம்மன் கோயில் இருக்குது. அதில போயிருந்து அழுவன். அம்மனை ஆயிரம் நேத்திவைச்சு கும்பிட்டன் என்ர பிள்ள எனக்கு கிடைக்க வேணுமெண்டு. அங்க பல தாய்மார்கள் கதறி அழுது கொண்டிருப்பினம். சாப்பாடுகூட இல்லாம மணிக்கணக்கா அம்மனட்ட வாய்விட்டே முறையிடுவினம். எல்லாரும் தங்கட பிள்ளையள புலியள் கடத்திக்கொண்டு போனதால அழுகின்ற தாய்மார்கள்தான். இந்த கோயில் உறவில சிலபேர் என்னோட கதைக்க தொடங்கிச்சினம். அப்பதான் தெரியவந்துது நான் நிக்கிற இடம் வெளிநாட்டில புலியளுக்கு உதவி செய்யிற ஆக்கள் நிக்கிற இடமெண்டும். அதால அங்க நிக்கிற நானும் அப்பிடியான ஆளெண்டு புலி வெறுப்பால என்னையும் வெறுத்து பார்த்த பார்வைதான் அது எண்டு. அதுக்குப் பிறகு சில சனம் கதையள் சொல்லிச்சுதுகள். வீடு வீடா புலியள் சுத்திவளைச்சு பெடியள் பெட்டையள பிடிச்சுக்கொண்டு போவினம் அவசர அவசரமா சுடச்சொல்லிக் குடுத்துப்போட்டு முன்னுக்கு அனுப்பிப் போடுவினம். ரெண்டு மூண்டு கிழமைக்குள்ள பலபேருக்கு செய்தி வரும் வீர மரணமெண்டு. பாவியள் ஒளிச்சோடின பிள்ளையளயும் மாட்டன் மாட்டன் எண்டு சொன்ன பிள்ளையளையும் கொண்டுபோய் கொண்டு போட்டு வீரமரணம் எண்டுவாங்கள். அந்ததாய்மார் தான் அந்த அம்மன்கோயில் வாசல்ல கிடந்து சாப்பாடும் இல்லாம கதறுங்கள். அவங்கள மண்ணள்ளி திட்டுங்கள். அது கூட அவங்கட ஆக்களின்ர காதில விழுந்துதெண்டால் அடியும் உதையும்தான். கொஞ்ச நாள்ள நானே இதெல்லாத்தையும் என்ர கண்ணால கண்டன் என்ர ஈரல் குலையெல்லாம் அதை நினைச்சால் இப்பயும் நடுங்குது. நானும்; இங்க இருக்கிறபோது மற்றாக்களப்போல ஆரும் இப்பிடிக் கதை சொன்னா பொய்யெண்டுதான் நினைப்பன், ஆனா கண்ணால பாத்தப்பிறகு நினைக்கிறன் இவன்ர ஆட்சி ஆண்டவனே வரவே கூடாது வந்தா விடுதலை கேட்ட மக்கள் ஆபிரிக்க அடிமையவிட கேவலமாதான் வாழவேணும்.செஞ்சோலை பிள்ளையளுக்கு குண்டு போட்ட கொடுமைய நினைச்சா நெஞ்சு பதறுது. ( சுற்றுமுற்றும் பார்த்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தொடர்கின்றார்) அவங்கட முகாம்கள் எல்லாமே சனத்தோட தொடர்பு பட்டுத்தான் இருக்கும். அம்மன் கோயில் தேர்முட்டி ஓலையால மூடிக்கட்டியிருக்கும் அதுக்குப்பக்கத்தில இவங்கட கரும்புலி முகாம் அதிலயும் இந்த தேர்முட்டி மாரி கட்டியிருக்கும். பள்ளிக்கூடத்துக்கு அருகில பெட்டையளின்ர பெரிய காம்ப் இருக்கு. கோப்பிறட்டிக்கு ஒரு சுவரோட இன்.னொரு முகாம். இப்பிடி எல்லாமே மக்களோட சேத்துதான் இருக்கு. செஞ்சோலையிலயும் ஒவ்வொருநாளும் பிள்ளையளுக்கு பயிற்சிதான் நடக்கும். வெளி ஆக்கள கூட்டிக்கொண்டு வாறபோது இதெல்லாத்தையும் நிப்பாட்டிபோடுவினம். அண்டைக்கும் அந்த பயிற்சி நடக்கிறபோது வேவு விமானம் குறுக்கால போச்சுது கொஞ்சநேரத்தில ரெண்டு கிபீர் வந்து அடிச்சுது. நான் பதறிக்கொண்டு ஓடிப்போய் மரத்தின்ர மறைப்புக்கு கீழ இருந்த பங்கருக்குள்ள போனன் வேற பக்கத்தில இருந்த ரெண்டுபேரும் அதுக்குள்ள ஓடிவந்து இருந்தினம் ஒரு பசுமாடும் அதில வந்து நிண்டுது. உண்மையா என்ர உச்சம்தலையில விழுந்தமாரித்தான் இருந்துது. பிறகு கிபீர் போனபிறகு கொஞ்ச பேர்தான் ஒடிப்போச்சினம் நானும் போனன். அதுக்கிடையில சில வாகனங்கள்ள பெடியள் வந்து இறங்கினாங்கள். ஆக்கள கிட்டபோக விடயில்ல. கொஞ்ச பிள்ளையள் செத்துப்போச்சுதுகள் கொஞ்சம் காயங்களோட கிடந்ததுகள். அந்தப்பிள்ளையள தூக்கி காப்பாத்த எந்த முயற்சியும் எடுக்கயில்ல. பிளீட்பண்ணித்தான் அதுகளெல்லாம் செத்ததுகள். நான் என்னோட கதைக்கற சனத்தோட கதைச்சன் ஏன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனால் காப்பாத்தலாம் தானே எண்டு. அவயள் என்ன பேசாமல் இருக்கச்சொல்லி சத்தம் போட்டினம். எனக்கு ஓரளவுக்கு இப்ப விளங்கீற்ருது. பிறகு புத்தகங்கள கொணந்து செத்த பிள்ளையளுக்கு பக்கத்தில போட்டுட்டு படமெல்லாம் எடுத்திச்சினம். அந்தக்கொடுமைய கண்ணால பாத்த பாவியா நான் இருக்கிறன். என்ர நெஞ்செல்லாம் படபடக்குது. ( நிறுத்திவிட்டார் நான் அதுபற்றி மேலும் சில கேள்விகள் கேட்கிறேன்) அது அரசாங்கம் சில ஆக்களட்ட ஏதோ ஒரு சாமான் குடுத்திருக்காம் ஒரு இடத்தில இருந்து அதை அமத்தினா ஆமிக்காரனுக்கு இடம் தெரியுமாம். இல்ல நான் காணயில்ல. ஆனா ஒரு கிழவன்தான் அத அமத்தி காட்டிக்குடுத்ததெண்டு அவற்ர மனிசிதான் சொல்லிக் குடுத்து மற்ரநாள் அந்தாள வந்து அடிச்சு இழுத்தெண்டு போனவங்களாம். இல்ல அத நான் காணயில்ல சொன்னவயள். ( இந்த சம்பவம் நடந்தபோது வெளிநாட்டு தூதுவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு வீடியோ காட்டியதாக செய்திவந்தது அது என்ன வீடியோ என்பது மறைக்கப்பட்டது. இவர் சொன்னதில் இருந்து முதலில் வந்த விமானம் வீடியோ எடுத்த பின்தான் கிபீர் குண்டு போட்டுள்ளது. புலிகள் விளம்பரத்திற்காக அந்த பிள்ளைகளை இறக்கவிட்டு படமெடுத்து வியாபாரம் செய்துள்ளார்கள் என்பது கணிக்கப்படுகின்றது) அதால சனமெல்லாம் சரியான வெறுப்பும் ஆத்திரத்தோடயும்தான் இருக்குதுகள். புpடிச்செண்டு போற பிள்ளையளுக்கு சப்பாத்து கூட குடுக்கிறதில்ல வெறும் றபர் செருப்போட இல்லையெண்டால் வெறும் காலோடதான் சண்டைக்கு அனுப்புறவங்கள்.அங்க ஒரு ரீச்சர் இருக்கிறா அவாக்கு நாலு பிள்ளையள். மூத்தது பெடியன் ரெண்டாவதும் மூண்டாவதும் பெட்டையள் கடைசி பெடியன் எட்டுவயசு. எனக்கு நல்ல உதவி. ஒரு நாள் பெடியன வரச்சொல்லி சொல்லிவிட பெடியன் போக விருப்பமில்லாம ஒளிச்சு திரிஞ்சான் ரெண்டாம் நாள் இரவு சுத்திவளைச்சு வீட்டுக்க புலியள் பாஞ்சாங்கள் அப்பயும் அந்தப்பிள்ள ஒடி ஒளிச்சிட்டான் அவங்கள் பெட்டைய பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். அது சரியான கெட்டிக்காறப் பிள்ளை தான் படிச்சு டொக்டரா வருவன் அம்மா எண்டுசொல்லும். தமயன் பிறகு தான்போய் சறண்ட பண்ணிக்கொண்டு தங்கச்சிய எடுத்து விட்டவன். மூண்டு கிழமையில மன்னார் சண்டையில செத்துப்போனதா வந்து சொன்னாங்கள்.அந்த தாய் கதறின கதறல் இப்பயும் என்ர காதுக்குள்ள கேட்டுக்கொண்டே இருக்குது. அந்த கடசி குழந்தப்பிள்ளை தாயட்டக் கேக்கும் “அம்மா அக்காவ வந்து கொண்டுபோனாங்களெண்டா நானாம்மா போகவேணும்” எண்டு. எனக்கே அழுகவந்து நெஞ்செல்லாம் கனக்குது அந்த தாய்க்கு எப்பிடி இருக்குமெண்டு நினச்சுப்பாருங்க. ( சொல்லும்போது சிந்திய கண்ணீர்த் துளிகளை துடைத்துக்கொள்கிறார்).இப்படி பல விடயங்களை கூறினார் கடைசியாக மகனைப்பற்றி கூறும்போது இந்த நாட்டில் படித்த பிள்ளைகள் திருப்பி கதைக்குங்கள்தானே இப்படியான அனியாயங்கள் செய்வதற்கு இவன் ஒத்துக்கொள்ளவில்லை அதனால் பல முரண்பாடுகள் அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து போனகாரணத்தால் இவரை கொல்லுவதற்கோ அல்லது கடுமையாக தண்டிப்பதற்கோ சற்று தயங்கினார்கள் சிலவேளைகளில் வெளிநாட்டு அரசுகளுக்கு மறுமொழி சொல்ல வேண்டி ஏற்பட்டு விடும் என்று நினைத்திருக்கலாம். அதே நேரம் மகன் இவற்றைப் பார்த்த காரணத்தால் சாப்பிட மனமின்றி சைவம் மட்டுமே சாப்பிட ஆரம்பித்து விட்டார். ஏன்னுடைய தொடற்சியான அழுத்தமும் மகனின் போக்காலும் மகனை விடுவதாக கூறி கடைசியாக ஆறு மாத வன்னி வாழ்கையின் பின் தெய்வாதீனமாக உயிர்தப்பி நானும் எனது மகனும் இந்த நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டோம். நான் வணங்கிய தெய்வங்கள்தான் என்னையும் என்ர மகனையும் காப்பாற்றி உள்ளது. அங்க பிரபாகரனின் இந்த கொடிய வதைகளில் இருந்து அந்த மக்கள் எப்படித்தான் வெளியேறப்போகின்றார்களோ தெரியாது. தமிழீழத்திற்காக உதவி செய்தவர்கள் நாங்கள் ஆனால் இப்போது நான் நினைப்பதெல்லாம் தமிழீழம் கிடைக்கவே கூடாது அதுவும் புலிகளின் அடக்குமுறையில் அதுஇருக்கவே கூடாது.(நீண்ட பெருமூச்சோடு கூறி முடித்தார்) அவர் பல விடங்கள் கூறியிருந்தார் அவற்றையெல்லாம் பார்க்கின்ற போது நாம் கற்காலத்துக்கு சென்றுவிட்டோமா என்று எண்ணத் தோன்றுகின்றது..ஆபிரிக்க அடிமைகளை விட கேவலமான அடிமைகளாக வன்னி மக்களின்; வாழ்வு இருக்கின்றது. இதிலிருந்து மக்கள் வெளியேற முடியுமா?

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

போராடும் உலகத் தமிழர் இனி என்ன செய்ய வேண்டும்..........

போராடும் உலகத் தமிழர் இனி என்ன செய்ய வேண்டும்.......... வசிட்டர்.
வன்னியில் சிறுபகுதிக்குள் மாட்டுப்பட்டிருக்கும் மக்களின் நிலை சங்கடமான நிலையாக உள்ள இந்த வேளையில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் அங்கலாய்த்தக்கொண்டுள்ளார்கள். இளைஞர்கள் உண்ணாவிரதம் அறப்போராட்டம் என்று உண்மையான மக்கள் கரிசனையோடு செயற்படுகின்றனர் இதைப்பார்க்கின்ற போது ஆயுதப் போராட்டம் ஈழத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் தங்களை இணைத்தக்கொண்டு தலைவர்கள் கூறியவற்றை வேத வாக்காக எடுத்து செயற்பட்ட இளைஞர்களின் ஞாபகம்தான் ஏற்படுகின்றது. அவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்கள் வாஞ்சையுடனுமே செயற்பட்டார்கள் ஆனால் சரியான சிந்தனையை பெற்றுக்கொள்ள தவறிவிட்டார்கள் தலைவர்களும் அவர்களை தங்கள் சுய நலத்திற்காக பாவித்தார்கள் முடிவு மக்கள் நேயத்தோடு மக்களுக்காக தங்கள் கல்வியை எதிர்கால வாழ்வை இழந்த அந்த இளைஞர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். எந்த சமூகத்திற்காக எல்லாவற்றையும் இழக்கத்தயாரானோர்களோ அதே சமூகம்தான் அந்த முத்திரையை குத்தி மகிழ்ந்தது. சமூகத்தில் வெறுப்போடு பார்கப்பட்டார்கள். அந்த நிலமை இன்று உலகெங்கும் போராட்டங்களை முன்னெடுக்கும் இளைஞர்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது. நல்ல தலைமை இல்லாமல் சுயநலத்திற்காக அவர்களை பயன்படுத்ப்பார்க்கும் தலைவர்களின் தவறான வழிநடத்தல் அந்த நல்ல இதயம் கொண்டவர்களுக்கு தாய்நாட்டு மக்களுக்கான போராட்டத்தில் வெறுப்பை ஏற்படுத்திவி;டவிடக்கூடாது என்பது என் முதற் கவலையாகும்.
இவர்கள் போராட்டத்தின்போது முன்வைக்கும் கோசம் “யுத்த நிறுத்தத்தை கொண்டுவருவதற்கு உலக நாடே இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள் என்பதே”. வன்னியில் அடைபட்டுக்கிடந்து உயிரிழக்கும் அப்பாவிப் பொதுமக்களை இதன்மூலம் காப்பாற்றலாம் என்ற நப்பாசை அவர்களுக்கு உள்ளது அதனால்தான் இந்த போராட்டங்களில் குதித்துள்ளார்கள். ஆனால் இதையே வெளிநாட்டில் தலைமை கொடுப்போர் எந்த விதமான அரசியல் அறிவோ அல்லது போராட்ட இயக்கங்களில் சேர்ந்திருந்து அதனால் கிடைத்த அனுபவமோ இல்லாத வெறும் புகழுக்காக அல்லது சிங்களவனுக்கு அடிபோட்டால் ஈழம் கிடைத்துவிடும் என்று உண்மையாகவே நம்பிக்கொண்டிருக்கும் உயர்ந்த சிந்தனை அறிவு அற்றவர்களால் புலிகளால் வைக்கப்படும் ஏமாற்றுக்கோசங்கள் எடுத்துச் செல்ப்பட்டு திணிக்கப்படுகின்றது.புலிகளால் கொடுக்கப்பட்ட சிந்தனைதான் நிரந்தர யுத்தநிறுத்தம். நிரந்தர யுத்தநிறுத்தம் ஏன்? அழிவின் விழிம்பில் இருக்கும் புலிகள் தப்பிப் பிழைக்கவேண்டும் பின் வழமைபோல் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு மீண்டும் ஒரு சில தாக்குதல்கள், அதனால் பெறப்படும் வெளிநாட்டு பணம் அதை வைத்துக்கொண்டு மக்களை ஆளுதல் (அடக்கி)..இப்படிக்கேட்பதன்மூலம் போராட்டம் செய்வோர் தாங்கள் கேட்பதை வெளிநாடுகள் செய்யுமா என்பதை சிந்தித்து பார்த்தால் இல்லை என்பதுதான் விடையாகும். காரணம் உலகநாடுகள் எல்லாமே புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூறியுள்ளது. நாம் விரும்பாவிட்டாலும் உண்மையும் அதுதான். ஆகவே இந்த வேண்டுகோளை எந்த நாடுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆகவே உண்மையில் மூன்று லட்சம் மக்களை காப்பாற்றும் எண்ணம் இருந்தால். முன்வைக்கப்பட வேண்டிய கோசம் உலக நாடுகளே எம்மக்களைக் காப்பாற்ற என்ன செய்யப் போகின்றீர்கள் என்ற கேள்வி மட்டுமே. மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகள் நிட்சயமாக சிந்திக்கும். மக்களை பாதுகாப்பதற்கு அழுத்தங்களைக் கொடுக்கும். ஆயுத தாரிகள் விலகுங்கள் மக்கள் தங்கள் விருப்பப்படி விரும்பியதை செய்யட்டும் என்று கேட்கின்ற நிலை வரும். அப்படியான நிலைமை ஏற்பட்டால் மக்கள் எவரின் அழுத்தமும் இல்லாமல் தாங்கள் விரும்பியதை செய்வார்கள். புலிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய தேவையையோ, அரசிடமிருந்து பாதுகாக்க வேண்டிய தேவையையோ யாரும் சிரமப்பட்டு எடுக்கவேண்டிய தேவை கிடையாது. மக்கள் தாங்களே எடுப்பார்கள் அவர்கள் வாய்களும் கைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டால் போதும். மக்களுக்காக குரல் கொடுப்போர் செய்வார்களா.சிலர் கேட்கின்றார்கள் தமிழ் மக்களுக்கு ஒரு தலைமை வேண்டும்தானே என்று. இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு தலமை தாங்கியவர்கள் தொடர்ந்து செய்தது என்ன? இனத்துவேசம், இனவெறி, நாட்டுமக்களை தொடரந்;து தமக்கு வாக்களிக்க பண்ணி சொகுசு வாழ்க்கை, உண்ணாவிரதம், பகிஸ்கரிப்பு, கடையடைப்பு, பல்கலைக்கழக பகிஸ்கரிப்பு, ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் எல்லாவற்றையும் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்டு மீண்டும் தலமை தாங்குவதற்கு நாடடுக்கு வருதல் அடிமைகொள்ளல்., கடைசியாக நாலில் மூன்று பங்கு தமிழர்களை நாட்டில் இருந்து புலம்பெயரச்செய்த பெருமை, இதற்கொரு தலமை தேவைதானா. மக்கள் இப்போது நன்றாகவே நாட்டைப் படித்துவிட்டார்கள் அவர்களை அங்கே சுதந்திரமாக விடுங்கள் அது மட்டும் தான் தேவையானது. இன்னும் சிலர் கேட்கிறார்கள் அப்படி மக்கள் வெளியேறிவிட்டால் புலிகள் முற்று முழுதாக அழிந்துவிடுவார்கள். பின் மீண்டும் கட்டியெழுப்புவது என்பது இலகுவானதா என்று. இலகுவானது அல்ல ஒரு சரியான மக்கள் விடுதலைக்கான அமைப்பு உருவாவது என்பது இலகுவானதல்ல. ஆனால் ஈழ விடுதலை அமைப்பு பயங்கரவாத செயல்களை செய்ததன் மூலம் விடுதலை அமைப்பு என்ற பெயரை இழந்து உலகெங்கும் பயங்கரவாத அமைப்பென்ற பெயரோடு நிற்பது தேனைக்குரிய உண்மை. இதன் காரணம் அரசியல் அறிவில்லாத வெறும் ஆயதத்தை நம்பிய தலைமை என்பதால்தான் என்பதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள். இதற்கு நல்ல உதாரணம் அரசியல் அறிவுள்ள சில தலைவர்களால் மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருந்த சுய நல அரசியல் வாதிகளான கூட்டணியினரை அப்புறப்படுத்தி மக்களை விழ்ப்படைய செய்தது. ஆனால் இன்று அதே சுய நல அரசியல் வாதிகளை தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரோடு தலைவர்கள் ஆக்கி பாராழுமன்றம் அனுப்பிய அரசியல் அறிவற்ற தலைமை தான் என்பது துர்அதிஸ்ட வசமானது. (பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பார்கள் ). இந்தக் கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் போது தமிழ் கூட்டமைப்பினர் சிலர் புலித்தலைமைக்கு எதிராக பல்டி அடிக்க தொடங்கியுள்ள செய்திகள் வருகின்றது. உண்மையில் இது நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியப் படவேண்டும்.ஆக மக்களை காப்பாற்றும் நோக்குள்ளவர்களே உங்களுடைய உண்மையான போராட்டத்தில் அரசியல் அறிவற்ர சுயநலமிகளின் தலையீட்டை அனுமதிக்காமல் சிந்தித்து செயல்ப் படுங்கள் இல்லையேல் நாளை நீங்கள் துரோகிகள் என்று தூற்றப்படுவீர்கள். சிந்தித்து செய்படும்போது தூற்றப்பட்டால் பெருமைப்படலாம். ஏனென்றால் வெளிநாட்டில் வாழும் அரசியல் அறிவற்ற தலைவர்களுக்கு இன்றைய துரோகிகள் நாளைய தியாகிகள். (வரலாற்றில் பலர் எம் கண்முன் இருக்கின்றார்கள்). இவர்கள் பட்டம் எவரையும் எதுவும் செய்துவிடாது. நியாயத்துக்கும் மனிதாபிமானத்திற்கும் கட்டுப் படுவோம்.மீண்டும் அடுத்த கட்டுரையோடு வருகின்றேன்.