வசிட்டர்
உலகின் இரண்டாவது பெரிய இரானுவத்தை வெற்றி கொண்டதாக இறுமாந்திருந்த புலிகள் இன்று உலகில் மிகச்சிறிய ராணுவத்திடம் தோற்றுப்போகின்றது. புலிகள் தோற்றுப்போவது தற்போதைய நிலையில் அவசியமான ஒன்றுதான் என்பதை புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களை தவிர நாட்டில் புலியின் அராஜகத்திற்குள் சிக்கித் தவித்த அனைத்து மக்களும் எதிர்பார்த்தார்கள்.இந்திய ராணுவத்தை வெற்றிகொண்டதன் பின்புலத்தை பிரபாகரன் என்றுமே திரும்பிப்பார்த்ததில்லை. அந்த வெற்றியின் முதற்காரணம் மக்கள்தான். புலிகள் தங்கள் வழமையான இராணுவ தந்திரோபாயங்களை ( மக்கள் செறிந்து வாழும் இடங்களில் ராணுவத்தின் மேல் குண்டெறிந்து வி;ட்டு ஓடுவதுஇ துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு ஓடுவது.) பாவித்தல் மூலம் ராணுவத்தை ஆத்திரமூட்டி அவர்கள் மக்கள் மேல் தங்கள் அராஜகங்களை செய்யும் போது அப்பாவி மக்களும் இவர்களுக்கு புலிகள்தான் சரி என்ற முடிவுக்கு வந்து புலிகளை தங்கள் ஆபத் பாந்தவர்களாக நினைக்கத் தொடங்கி விடுவதும் அதனால் புலிகளுக்கு ஆட்கள் சேருவது முதலஇ; உதவிகள் இ உணவுஇ மறைவிடம் என்பனபோன்றவற்றையும் தாராளமாக செய்தார்கள். ஆனால் தற்போது உள்நாட்டில் புலம் பெயர்ந்;த யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்களில் பெரும் பாலானவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் வவுனியாவிற்கும் சென்றுவிட. ஒரு குறைந்த எண்ணிக்கையான யாழ்ப்பாணத்தவரும் மிகுதியாக வன்னி மக்களுமே புலிகளிடம் மாட்டுப்பட்டிருந்தார்கள். இவர்கள் வெளிஉலகமே தெரியாத கிணத்துத் தவளைகளாகவே வாளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையாயிற்று. புலிகளின் வன்னிப் பிரதேசம் வெளிநாடு வாழ் உல்லாசப்பயணிகளான தமிழர்களை கவரும் வகையில் கோட்டல்களும் பளிங்கு கற்களால் ஆன கல்லறைகளும் பூப்பாத்திகளும் அமைக்கப்பட்டன. உல்லாசிகளும் இதை மட்டுமே பார்த்துவிட்டு வந்து ஆகா வெளிநாடுமாரி புலி வைத்துள்ளது என்ற வண்ணம் டொலர்களில் கொஞ்சம் பிச்சையும் போட்டு வர்தார்கள். ஒருவராவது ஏ 9 வீதியில் இருந்து ஒரு இரண்டு கிலோ மீற்ரர் உள்சென்று பார்க்க நினைக்கவும் இல்லை புலிகளால் பார்க்க விடப்படவுமில்லை. பார்த்திருந்தால் வாய்திறக்க உரிமையின்றி இ தொழில் வசதி எதுவுமின்றி தங்கள் வாழ்வாதாரத்திற்கு புலிகளிடம் பிச்சை எடுத்து உண்ணும் நிலை என்பது விளங்கியிருக்கும். அரச உத்தியோகத்தவர்கள் கூட இலங்கை அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு ( அதிலும் புலிக்கு வரி கொடுத்து விட்டு) புலியின் கட்டளைக்கு சேவை செய்தார்கள். பிள்ளைகள் பலவந்தமாக இணைக்கப்பட்டார்கள் இவை எல்லாம் மக்கள் மனங்களில் கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது அவர்கள் புலிகளைக் காட்டிக்கொடுக்கும் நிலைதான் உள்ளது இது நியதி. இதுதான் இன்று ராணுவம் வெற்றி கொண்ட முதற்காரணம்.இரண்டாவது புலிகளில் பல திறமையான இடைநிலை தலைவர்கள் இருந்தார்கள். ( அவர்களும் அரசியல் மயப்படாத வெறும் இயந்திர திறமை மட்டும் உள்ளவர்கள்தான்.) குறிப்பாக கருணாஇ மாத்தையாஇ அவர்களோடு சேர்தவர்கள். இவர்களின் திட்டமிடல் போராட்ட வழிமுறைகளால் பெற்ற வெற்றிகளையெல்லாம் பிரபாகரன் தன்னுடைய நேரடித் திட்டமிடலும் நெறியாள்கையும் என்று வெளிநாட்டு தமிழர்களுக்கு சொல்லி. தட்டிக் .கொடுக்கப்பட வேண்டிய சிறந்த போராளிகளை துரத்திக்கலைத்து விட்டு அல்லது கொன்றுவிட்டு அடுத்தநகர்வை திட்டமிட முடியாமல் போனது. ( பிரபாகரனின் திட்டமிடலை பொலிஸ் கான்ஸ்டபிளை சுட போன போதே நாங்கள் அறிந்தவர்கள். அன்று பாலா என்ற போராளி இல்லையென்றால் அன்றே அவருக்கு பாலூற்றப்பட்டடிருக்கும் ) இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புவது ஆனையிறவு முகாம் தாக்குதல். பிரபாகரனின் திட்டமிடலில் தொடங்கி ஜநூறு போராளிகள் மாட்டுப் பட்டு நின்றபோது எல்லாம் முடிந்ததென தலைவர் கைவிரிக்க கருணா தலைமையில் கிழக்கு வடக்குப் போராளிகள் இணைந்து கருணாவின் திட்டமிடலில் போராளிகளை மீட்டது மட்டுமல்லாது வெற்றியும் கொண்டது. அதன் பின்பும் அந்த வெற்றியையும் தானே சூட்டிக்கொண்டது. இது உள்ளக போராளிகளுக்கு விழுந்த மாபெரும் அடியாகும். எந்த மடையன்தான் தன்னுடைய திறமையால் மற்றவன் பேர் பெற்றுக்கொள்ள அனுமதிப்பான். இன்று அதன் விழைவு இலங்கை ராணுவம் பெற்ற வெற்றி.இப்போ மக்களின் கேள்வியெல்லாம் பிரபாகரன் பிடிபடுவானா தப்பி ஓடிவிடுவானா அல்லது சயனைட் அடிச்சு மாவீரனாவானா என்பதுதான். பிரபாகரன் என்ன ஆவான் என்பதைவிட மக்கள் விடுதலை என்பது மரணித்து விட்டது என்பது தான் மன வேதனையானது. முற்போக்கு சிந்னையுடன் வர்க்கவிடுதலைக்காக ஆயுதமேந்தியவர்கள் அளிக்கப்பட்டு இன விடுதலைஎன்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் வேள்வித் தீயில் போட்டு தன் சுயநலத்திற்காக ஒரு நாட்டின் ஒரு தேசத்தின் எதிர்பார்ப்பையே தீயில் கருக்கிய ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கு எந்தத்தண்டனைதான் பொருந்தும். எம் கேள்விகள் அடுத்து என்ன செய்யப்படல் வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் ஆக்கபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும். அந்த விவாதத்தின் வழியாக விடை காணப்படல் வேண்டும். எனது சிந்தனையின் வெளிப்பாடு அடுத்த கட்டுரையில் முன்வைக்கப்படும்
செவ்வாய், 27 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)